fbpx
Connect with us

Cinemapettai

5 துணை முதலமைச்சர்கள்.. முதல்வன் பட பாணியில் அதிர வைக்கும் ஜெகன்மோகன் ரெட்டி

jagan-mohan-reddy

India | இந்தியா

5 துணை முதலமைச்சர்கள்.. முதல்வன் பட பாணியில் அதிர வைக்கும் ஜெகன்மோகன் ரெட்டி

Jagan Mohan Reddy: ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக முதியோர்களின் பென்ஷன் தொகையை இருமடங்காக உயர்த்தினார். துப்புரவு தொழிலாளர்களின் சம்பள தொகையை நான்கு மடங்காக உயர்த்தி அதிர வைத்தார்.

அடுத்து குறியாக மதுவிலக்கை அமுல்படுத்தும் முயற்சி செய்து மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. மேலும் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு நாட்களுக்காக ஒரு நாள் முழுவதும் ஸ்கூல் புத்தகங்கள், பேக் எடுத்து வராமல் தங்களுக்கு பிடித்தமான விளையாட்டை விளையாடலாம் என்று அதிர வைத்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் செல்லும் வழியில் சிறு கூட்டம் நின்றது. அதனை பார்த்து என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு, கேன்சருக்கு பணம் இல்லை என்று கூறினார்கள். உடனே 20லட்சம் ரூபாய் பணத்தை கேன்சருக்கு உதவி செய்துவிட்டு உடனே சரி செய்ய சொல்லி ஆர்டர் போட்டு விட்டு கிளம்பிவிட்டார் ஜெகன்மோகன் ரெட்டி.

தற்பொழுது வரலாற்றில் இல்லாத அளவு ஆந்திராவிற்கு 5 துணை முதலமைச்சர்கள் அமைக்கப்படுவார்கள் என்று கூறி அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஜெகன்மோகன் ரெட்டி. அதிலும் ஐந்து துணை முதலமைச்சர்களும் ஐந்து ஜாதியை கொண்டவர்களாக இருப்பார்கள்.தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைவரும் இதில் அடங்குவார்கள் என்று அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

நாம் இங்கு முதல்வன் மாதிரி சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறோம். அங்கு முதல்வன்  பாணியில் முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top