Connect with us

Cinemapettai

jagan-mohan-reddy

Politics | அரசியல்

அடுத்த அதிரடி திட்டத்தை வெளியிட்ட ஜெகன் மோகன் ரெட்டி.! ‘பிரஜா தர்பார்’என்றால் என்ன தெரியுமா?

அரசியலை தலைகீழாக புரட்டிப்போடும் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த இலக்கு ‘பிரஜா தர்பார்’ . 2009 ஆம் ஆண்டு விமான விபத்தில்  ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறந்து விடுகிறார்.

இதற்குப் பின் தற்போது பொறுப்பேற்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

இது தனது அப்பாவால் தொடங்கப்பட்ட ‘பிரஜா தர்பார்’ என  அழைக்கப்பட்டு,  இதில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை மற்றும் மனுக்களை கொடுக்கலாம்.

முதலமைச்சர் அலுவலகத்தில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நாள் தோறும் காலை 8 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

மக்களின் துன்பத்தையும் துயரத்தையும் துடைப்பதற்கு முதலமைச்சர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பெரும் ஆதரவு  இந்திய அளவில் ஏற்பட்டு வருகிறது.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவார் என்று மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நம் தமிழ்நாட்டில் தற்போது தான் கிராம சபை கூட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதில் மக்களின் குறைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top