Connect with us

Cinemapettai

jagan mohan reddy

Politics | அரசியல்

சந்திரபாபு நாயுடு வீடை இடித்து காலி பண்ணியாச்சி.. அடுத்து ஆபீசை தரைமட்டமாக்கும் ஜெகன்மோகன்

ஜெகன்மோகன் ரெட்டி செயலால் தற்போது சந்திரபாபு நாயுடு பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். ஆனால் இது அரசியல் சூழ்ச்சியா இல்லையா என்பது தெரியவில்லை. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு பிரஜா வேதிகா பங்களா ஒன்றை கட்டியிருக்கிறார்.

அது சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டதாக கூறி அந்த பங்களாவை தரைமட்டமாக்கினார் ஜெகன்மோகன் ரெட்டி. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியின் விசாகபட்டினம் நகர அலுவலகத்தில் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமான பணிகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு தெலுங்கு தேசம் கட்சி சட்டத்திற்குப் புறம்பாக இரண்டு மாடிகளை கட்டியுள்ளனர் என செய்தி வந்தது. இதற்கான முறையான ஆவணங்கள் அனுமதியோ பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர். விவகாரத்தில் அந்த கட்சி சார்பில் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவில்லை என்றால் கட்டிடங்கள் அகற்றப்படும் என தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து விசாகப்பட்டினம் செயலாளர் ரெஷ்மான் பேசுகையில் தற்போது எங்கள் அலுவலக இடமானது கடந்த 2002 ஆம் ஆண்டு குத்தகைக்கு எடுக்கப்பட்டது. 25 ஆண்டுகள் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 2500 ரூபாய் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆந்திர பிரதேசத்திற்கு சொந்தமான இடத்தில்தான் நாங்கள் உள்ளோம். எங்களுக்கு  அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து விரைவில் அதற்கான பதிலை வெளியிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட இந்த கட்டிடம் கூட தரைமட்டமாக வாய்ப்புள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top