India | இந்தியா
எடப்பாடியாரை பின்பற்றும் ஜெகன்மோகன் ரெட்டி.. தமிழக அரசின் வியாபார யுக்தி
அப்படி என்னன்னு தான கேட்கிறீங்க..
தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1(நேற்று) முதல் மொத்த மதுபான கடைகளையும் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த போது மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் கிராமப்புறங்களில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்று வந்த சிறிய கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.
மேலும் மற்ற மாநிலங்களில் மதுபான விற்பனை விவரங்களை கேட்டறிந்தார். அதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஐடியா அவருக்கு பிடித்துப் போய் உள்ளது.
அதன்படி ஆந்திராவில் உள்ள 4,377 தனியார் கடைகளில் உரிமைகளை ரத்து செய்து தற்போதுள்ள மதுக்கடைகளின் அளவில் 20 சதவீதத்தை குறைத்து 3,504 கடைகள் நேற்றிலிருந்து பயன்பாட்டிற்கு வந்தன. நகர்ப்புற கடைகளுக்கு 4 நபர்கள் என்றும், கிராமப்புற கடைகளுக்கு 3 நபர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
