Connect with us
Cinemapettai

Cinemapettai

தனுஷை லண்டன் தாதாவாக மாற்றியது கார்த்திக் சுப்புராஜின் மனைவி தானாம்.. மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷை லண்டன் தாதாவாக மாற்றியது கார்த்திக் சுப்புராஜின் மனைவி தானாம்.. மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்

ஜூன் 18 தனுஷின் ஜகமே தந்திரம் நெட் பிலிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆனது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம். ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, தனுஷ் என மூவரும் தங்களின் நடிப்பால் கலக்கிவிட்டனர்.

படத்தின் பிளாஷ் பேக் காட்சிகள் கதையோட்டத்தில் நல்ல திருப்புமுனையையும் கொடுத்தது. எனினும் படத்தின் எடிட்டிங் வெர்ஷன் நம் மக்களுக்கு ஏற்றது போல இல்லை என்பது பலருக்கு வருத்தம்.

பாடல்களை நீக்கிவிட்டனர், ஆங்கில வசனங்கள் அதிகம் என அடுக்ககிக்கொண்டே போகலாம். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் கதை ஓட்டத்திற்கு ட்விஸ்ட் ஏற்படுத்திய கதாபாத்திரம் பற்றி தான் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

‘பேட்ட’ திரைப்படத்தில்  ரஜினி கல்லூரி வார்டனாக வேலைக்கு வரும்போது அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கும் கேரக்டரில் கார்த்தி சுப்புராஜ் மனைவி சத்ய பிரேமா நடித்திருப்பார்.

இறைவி படத்தில்  நடித்திருப்பார், அதே போல் ஜகமே தந்திரம் படத்திலும் அவர் நடித்துள்ளார். சுருளி ரயிலில் செய்யும் கொலையை பார்த்துவிட்டு, அதனை மணப்பெண்ணிடம் பகிரும் கதாபாத்திரத்தில் நாடித்திருப்பவர் கார்த்திக் சுப்புராஜ் மனைவி. இதனை வைத்தே மீம்ஸ் போடுகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

jagame thanthiram guest role

தனுஷ் கல்யாணம் மட்டும் நிக்காமல் இருந்திருந்தால், மனிதர் மதுரை மண்ணில் ரௌடியாக நம் மனதை கவர்ந்திருப்பார் என்றும் சொல்கின்றனர் ஒரு சிலர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top