ஜகமே தந்திரம் படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் இதுதான்.. கார்த்திக் சுப்புராஜ் சொன்ன சீக்ரெட்

கர்ணன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம்.

ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 17 மொழிகளில் ஜகமே தந்திரம் திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டு நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ள நிலையில் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த படம் தியேட்டரில் வெளியாக வேண்டிய திரைப்படம் எனவும் வருத்தப்படுகின்றனர்.

ஜகமே தந்திரம் ட்ரெய்லரில் தனுஷ் பேசும் சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா என்ற வசனம் ரசிகர்களிடையே செம பேவரைட்டாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் பேட்ட படத்தில் வரும் ரஜினியின் பேட்ட வேலன் கெட்டப்பில் தனுஷ் நடித்துள்ளார்.

இப்படி ஒன்றுடன் ஒன்று இந்த படத்தை முந்தைய ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படங்களில் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் ஜகமே தந்திரம் படத்திற்கு முதன் முதலில் வைக்கப்பட்ட பெயர் சுருளி என குறிப்பிட்டுள்ளார்.

தனுஷின் கதாபாத்திரத்தின் பெயரான சுருளி என்பதையே டைட்டிலாக வைக்கலாமா என யோசித்து வந்தாராம். ஆனால் ஒருமுறை ரஜினியின் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் ஜகமே தந்திரம் பாடலைக் கேட்டபோது இது படத்தின் கதைக்கு சரியான டைட்டில் என ஜகமே தந்திரம் டைட்டிலை தேர்வு செய்துவிட்டாராம்.

jagame-thandhiram-cinemapettai-01
jagame-thandhiram-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்