Videos | வீடியோக்கள்
தர லோக்கல் ரவுடியாக கலக்கும் தனுஷ்.. தாறுமாறாக வெளிவந்த ஜகமே தந்திரம் டீசர்
பேட்ட படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் ஜகமே தந்திரம். கடந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருந்த திரைப்படம் தற்போது நேரடியாக ஓடிடி ரிலீஸுக்கு சென்றுள்ளது.
தனுஷின் சினிமா கேரியரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஜகமே தந்திரம் படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அதற்கு காரணம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் முதன்முதலில் நடிப்பது தான்.
கேங்ஸ்டர் படம் என்றாலே கார்த்திக் சுப்புராஜ் தான் என்றாகிவிட்டது. இதனால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் தியேட்டரில் வெளியானால் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடலாம் என நினைத்திருந்தனர்.
ஆனால் தயாரிப்பாளர் ஒய்நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் நேரடியாக ஜகமே தந்திரம் படத்தை தூக்கி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு கொடுத்துவிட்டார். இது தனுஷுக்கே பெரிய அதிர்ச்சி தான்.
கிட்டத்தட்ட ஆறு மாத காலமாக மொத்த படப்பிடிப்பும் முடிந்து ரிலீசுக்கு தயாராக வைத்திருந்த படத்தை தற்போது தியேட்டர்கள் திறந்த பிறகும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுவது தனுஷுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கொட்டித் தீர்த்திருந்தார் தனுஷ்.
இருந்தாலும் கை மீறிப் போனது என்ன செய்ய முடியும். விரைவில் ஜகமே தந்திரம் படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாம். அதற்காக தற்போது ஜகமே தந்திரம் டீசரை வெளியிட்டுள்ளது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம்.
