கர்ணன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது தனுஷ் நடிப்பில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர்.
பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை இந்த படத்தை பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து தனுஷ் தற்போது அதுபற்றி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த தகவல் இணையதளங்களில் வைரலாக பரவுகிறது. அது ஒரு புறமிருக்க, ஜகமே தந்திரம் படத்தின் கதை என்ன என்பதை தனுஷ் ட்ரைலரில் வரும் ஒரே ஒரு பஞ்ச் டயலாக் மூலம் மொத்தத்தையும் கூறிவிட்டார்.
அந்த வசனம் தான் சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா. மதுரையில் பரோட்டா கடை வைத்து ரவுடிசம் பண்ணிக் கொண்டிருக்கும் தனுஷ் எப்படி லண்டன் தாதா ஆகிறார்? என்பதுதான் கதை.
இருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் படத்தை எப்படி எடுத்திருக்கிறார் என்பதை பார்க்க தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால் ஒரு சிலரோ அதான் படத்தின் மொத்த கதையும் தெரிந்து விட்டதே, இனி அதை பார்த்தாலும் வேஸ்ட் தான் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இப்படி சொல்லுபவர்கள் தான் முதல் ஆளாக படத்தை பார்க்கச் செல்வார்கள். கண்டிப்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு ஜகமே தந்திரம் திரைப்படம் ஒரு ஜாக்பாட்டாக இருக்கப் போகிறது.
