Connect with us

Cinemapettai

ஜகமே தந்திரம் 2 எடுங்க.. கார்த்திக் சுப்புராஜை இம்சை பண்ணும் தனுஷ்

dhanush-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் 2 எடுங்க.. கார்த்திக் சுப்புராஜை இம்சை பண்ணும் தனுஷ்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகும் ஜகமே தந்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தனுஷின் கதாபாத்திரம் செம இன்ட்ரஸ்டிங் ஆக அமைந்துள்ளதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். மேலும் தனுஷுக்கும் இந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்துவிட்டதாம்.

ஜகமே தந்திரம் படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் அந்த கதாபாத்திரத்தை மிகவும் என்ஜாய் பண்ணி நடித்ததாகவும், சுருளி செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் இந்த படத்தில் சூப்பராக இருக்கும் எனவும் தன்னை சார்ந்தவர்களிடம் கூறிவருகிறாராம்.

இதனால் கார்த்திக் சுப்புராஜிடம் ஜகமே தந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தனுஷ் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மேலும் ஜகமே தந்திரம் படத்தில் மலையாள நடிகர் ஜார்ஜ் நடித்த கதாபாத்திரத்தை முதன் முதலில் நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், கால்ஷீட் பிரச்சனையால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது எனவும் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார்.

மேலும் ஜகமே தந்திரம் திரைப்படம் கிட்டத்தட்ட 17 மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற மொழிகளில் டப் செய்யப்படுவதால் அந்தந்த மொழிக்கு ஏற்ப சில பாடல் காட்சிகளை படத்திலிருந்து தூக்கி விட்டதாக கூறியுள்ளனர். இப்போது அனைவரும் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

jagame-thandhiram-cinemapettai-01

jagame-thandhiram-cinemapettai-01

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top