Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரவீந்திர ஜடேஜா மனைவியை தாக்கிய போலீஸ் கான்ஸ்டபிள் !
ரவீந்திர ஜடேஜா
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபில் ஆடும் இவர் குஜராத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2016 இல் ரிவா சோலங்கி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நித்யனா என்ற மக்கள் உள்ளார்.

Jadeja
ஜாம்நகரில் தனது BMW காரில் குழந்தையுடன் நேற்று சென்று கொண்டிருந்தார் ரிவா. அப்பொழுது முன்னால் சென்றுகொண்டிருந்த பைக் மீது இவரின் கார் மோதியதால் சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த டூ வீலரில் சென்றவர் சஞ்சய் அகிர் என்ற போலீஸ் கான்ஸ்டாபில்.

Reeva Solanki CAR
விபத்து நடந்த உடன் ரிவா காரை விட்டு இறங்கி வந்துள்ளார். அப்பொழுது கோபம் அடைந்த சஞ்சய், ரிவாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ரிவா காயமடைந்தார். அக்கம் பக்கத்தில் நின்றவர்கள், அவரை அந்த காவலரிடம் இருந்து மீட்டுள்ளனர்.
Gujarat: Wife of cricketer Ravindra Jadeja, Riva Solanki, allegedly thrashed by a police personnel after the vehicle she was in, hit another police personnel's bike in Jamnagar. SP Jamnagar Pradip Shejul says 'Case registered. Departmental action will be taken against the cop.' pic.twitter.com/KUvl2NRSmg
— ANI (@ANI) May 21, 2018
தன்னை தாக்கிய சஞ்சய் அகிர் மீது ரிவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த போலீசார்;மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். டிபார்ட்மென்ட் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது
