Sports | விளையாட்டு
இந்த ஒரு விஷயத்தால் தூக்கத்தை தொலைத்த ஆல் ரவுண்டர்.. களத்தில் கைக்கொடுத்த தோனியின் பிரம்மாஸ்திரம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றிபெற்றது. ஜடேஜா – பாண்டியா ஜோடி அடித்து வெளுத்த காரணத்தால் இந்திய அணி நேற்று வெற்றிபெற்றது. ஹர்திக் பாண்டியா 76 பந்தில் 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்துகளில் அதிரடியாக ஆடி 66 ரன்கள் எடுத்தார்.
ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு ஜடேஜா மற்றும் பாண்டியா ஜோடி கைகொடுத்தது. முதலில் நிதானமாக ஆடிய ஜடேஜா ஆஸ்திரேலியா பவுலர்களை துவம்சம் செய்து இந்திய அணி 300 ரன்களை கடக்க உதவி செய்தார்.
போட்டி முடிந்த பின் ஜடேஜா, ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடுவதும், இங்கு விக்கெட் எடுப்பதும் மிகச் சிறந்த உணர்வை தருகிறது. ஆஸ்திரேலிய அணி மிகவும் வலிமையானது. அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொள்வது பெரும் சவாலாக உள்ளது என கூறியுள்ளார்.
மேலும் அவர் கடைசி போட்டியில் தான் வெற்றி பெற்று இருக்கிறோம். இதே மனநிலையோடு நாங்கள் டி 20 போட்டியிலும் களம் இறங்குவோம். இது எங்களுக்கு பெரிய உறுதுணையாக இருக்கும். இரண்டாவது போட்டியில் நான் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை தவற விட்டேன்.
அதன்பின் எனக்கு தூக்கமே வரவில்லை. அதை பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தேன், கண்ணை மூடினால் தூங்க கூட முடியவில்லை. அந்தத் தவறை திருத்திக் கொண்டுள்ளதாகவும் இனிவரும் போட்டிகளில் தன்னுடைய முழு பங்களிப்பு இருக்குமெனவும் கூறியுள்ளார்.
களத்தில் நீண்ட நேரம் இருந்தால் கடைசி நேரத்தில் கூடுதலாக ரன்களை அடிக்க முடியும் என தனக்கு தோனி கற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Jadeja-dhoni-Cinemapettai.jpg
