இந்த போஸ்க்கு என அர்த்தம் ஜாக்குலின்.. அப்பனா ரக்க்ஷன் நிலைமை!

எப்பொழுதுமே விஜய் டிவி-யில் கல்யாணம் ஆகாமல் வேலை செய்பவர்களை எப்படியாவது புரளிகளை கிளப்பி அங்கு உள்ளவர்களுக்குள்ளேயே காதலை ஏற்படுத்தி விஜய் டிவி செட்டிலேயே திருமணம் செய்து வைத்து அனுப்பிவிடுவார்கள்.

அப்படி நிறைய ஜோடிகள் திருமணமான ஒரு வருடத்திலேயே பிரிந்த கதையும் உண்டு. தற்போது அந்த புரளி வாடை ஜாக்குலின் மற்றும் ரக்ஷன் ஆகிய இருவரின் மீதும் அடிப்பதாக விஜய் டிவி சம்பந்தப்பட்ட ஆட்கள் பேசி வருகின்றனர்.

அதேபோல் அவர்கள் இருவரும் இணைந்து ஏதாவது ஒரு நிகழ்ச்சி செய்தால் அங்கு உள்ளவர்கள் வேண்டும் என்றே அவர்களை தூண்டி விடுவதை போல பேசுவதைக் காண முடிகிறது. இருந்தாலும் தற்போது ரக்ஷன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜாக்லின் விஜய் டிவியிலேயே ஒரு சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படியே விட்டால் கதைக்கு ஆகாது என தனது பாய் பெஸ்டி எனப்படும் ஆண் நண்பனின் தோளில் சாய்ந்துகொண்டு இருக்கும்படி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ரக்ஷன் உடனான காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜாக்லின்.

மேலும் ஜாக்லின் வயதை விட அவரது காதலரின் வயது குறைவாக உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

jacquline boy friend
jacquline boy friend

Leave a Comment