Tamil Cinema News | சினிமா செய்திகள்
ப்பா.. நிப்பான் பெயிண்ட்னு கலாய்ச்ச நெட்டிசன்கள்.. மேக்கப் இல்லாமல், தலைதெறிக்க ஓட விட்ட ஜாக்குலின்!
விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்தாலே சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. பல திறமையாளர்களை சினிமாவிற்கு கை காட்டிய பெருமை விஜய் டிவிக்கு உண்டு.
அந்த வரிசையில் சாதாரண தொகுப்பாளினியாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய ஜாக்குலின், தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருப்பார். அதன்பின் விஜய் டிவியில் பிரபல சீரியலான ‘தேன்மொழி’-யில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவருடைய மொரட்டு குரலை கேலி செய்யாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், ஆனால் அதை எல்லாம் அசால்டாக தூக்கி எறிஞ்சுட்டு முன்னேறி செல்கிறார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஜாக்குலின், ஓவர் மேக்கப்புடன் இருக்கும் போட்டோவிற்கு நெட்டிசன்கள் பலரும் நிப்பான் பெயிண்ட், என சரமாரியாக கலாய்த்தனர்.

jacqueline
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேக்கப் இல்லாத க்யூட்டான போட்டோவை பதிவிட்டு, நெட்டிசன்களை தலைதெறிக்க ஓட விட்டார். மேக்கப்போட இருக்கிற ஜாக்குலின்னை காட்டிலும் வித்தவுட் மேக்கப்ல நெஜமாவே க்யூட்டா இருக்காங்க.
