Tamil Cinema News | சினிமா செய்திகள்
15 லட்சம் மதிப்புள்ள புதிய கார் வாங்கிய ஜாக்குலின்.. குடும்பத்தினருடன் வெளியான புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், தொகுப்பாளராகவும் இவர் செய்த சேட்டைகளை ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பலரும் ஜாக்குலின் குரலை கிண்டல் செய்து வந்தனர். ஆனால் பின்பு அந்த குரலே அவருக்கு சாதகமாக மாறி தொகுப்பாளரின் வெற்றிக்கு வித்திட்டது என்றே கூறலாம்.
ஜாக்குலின் தொகுப்பாளராக பணியாற்றிய அதே சேனலில் தற்போது சின்னத்திரை நடிகையாகவும் ஜொலித்து வருகிறார். இவர் தற்போது தேன்மொழி எனும் சீரியலில் நடித்திருந்தார்.
அதுபோக அப்பப்ப கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி படங்களிலும் நடித்து வருகிறார். முன்னணி கதாநாயகியாக நடிப்பதற்காக சில முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

jacqueline fernandez
தற்போது ஜாக்லின் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் தற்போது அவர் கார் வாங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
