ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அவமரியாதை செய்த ஜாக்லின், தட்டி கேட்ட விஜய் சேதுபதி.. கூட்டுக் களவணியாக இருக்கும் பவித்ரா தர்ஷிகா

Vijay sethupathi bigg boss 8: எப்பொழுது சனிக்கிழமை வரும், எப்படி விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார், போட்டியாளர்களை எந்த மாதிரி கேள்வி கேட்ப்பார் என்று பல கேள்விகள் இருந்த நிலையில் மொத்தத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக விஜய் சேதுபதி அசத்தி விட்டார். அந்த வகையில் நேற்று தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, முடிவில் ஆண்கள் அணியிடம் என்னதான் ஒற்றுமை இருந்தாலும் அவர்கள் ஒருவருக்கு பின் ஒருவர் ஒளிந்திருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்று விவாதத்தை வைத்திருக்கிறார்.

அதே மாதிரி பெண்கள் அணியிடம் ஒற்றுமை இல்லாவிட்டாலும் ஒவ்வொருவரும் அவருடைய தனிப்பட்ட விளையாட்டு விளையாடி ஜெயிப்பதற்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்ற கருத்தையும் வைத்திருக்கிறார். இந்த மாதிரி ஒவ்வொரு விஷயங்களையும் நேர்த்தியாக பார்த்து தெளிவான பதிலை கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் ஜாக்லின் செய்த விஷயத்தை கண்டிக்கும் விதமாக விஜய் சேதுபதி ஒரு சில கேள்வியை கேட்டார்.

அதாவது விஜய் சேதுபதி, ஜாக்குலின் இடம் நீங்க ஒரு டஃப் போட்டியாளர் என்று நினைத்ததுனால் மக்கள் உங்களை நாமினேசன் பண்ணுவார்களா என்று ஒரு கேள்வி வைத்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஜாக்லின் பதில் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் மறுபடியும் விஜய் சேதுபதி கேள்வி கேட்டார். ஆனால் இதற்கு பதில் கொடுக்க தெரியாத ஜாக்லின், விஜய் சேதுபதி அவமரியாதை பண்ணும் விதமாக காட்டினார்.

இதை நோட் பண்ணிய விஜய் சேதுபதி உடனே தட்டி கேட்க வேண்டும் என்பதற்காக ஜாக்குலினிடம் நீங்க சொல்ற பதில் எனக்கு புரியவில்லை என்பதற்காக தான் நான் திரும்பத் திரும்ப கேட்கிறேன். ஏனென்றால் எனக்குப் புரியவில்லை என்றால் மக்களுக்கு எப்படி புரியும். நான் மக்களின் பிரதிநிதியாக இங்கு நின்னு கேள்வி கேட்டால் அதற்கு நீங்கள் சரியான விளக்கத்தை சொல்ல வேண்டியது உங்களுடைய பொறுப்பு என்று அசால்டாக ஜாக்லின் திமிரை அடக்கி விட்டார்.

இதனை அடுத்து ரஞ்சித் மற்றும் ரவீந்தர் சேர்ந்து நாமினேஷன்காக பிராங்க் பண்ணலாம் என்று முடிவு பண்ணியது பவித்ராவுக்கு தெரியாதா என்று கேள்வி வருகிறது. அதன்படி தர்ஷிதாவும், பவித்ராவுக்கு தெரியாது தெரிந்தால் நிச்சயம் அவளும் ஒத்திருக்க மாட்டாள் என்று ஒரு பதில் கூறுகிறார். உடனே விஜய் சேதுபதி, பவித்ராவிடம் அவங்க பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் கடைசி பெட்டில் இருந்து கேட்டுக் கொண்டுதானே இருந்தீங்க.

அப்படி என்றால் உங்களுக்கு அந்த பிராங்க் விஷயம் ஏற்கனவே எதற்காக என்று தெரிந்திருக்கும். அப்படி இருக்கும் போது எதுவும் தெரியாதபோல் நீங்க ஏன் பெண்கள் அணியிடம் சொன்னீர்கள் என்று கேள்வியை முன் வைக்கிறார். ஆனால் பவித்ரா இந்த ஒரு விஷயத்தை ஏற்கனவே தர்ஷிதாவிடமும் சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது விஜய் சேதுபதி முன்னாடி எதுவுமே தெரியாதபோது தர்ஷிதாவும் பவித்ராவிடம் கேள்வி கேட்டு டிராமா பண்ணுகிறார்.

ஆக மொத்தத்தில் இவர்களுடைய உண்மையான முகத்தை காட்டும் விதமாக இன்று ஒரு குறும்படம் விஜய் சேதுபதி போட்டு காண்பிப்பது உறுதி ஆகிவிட்டது. இப்படி அதிரடியாக ஒவ்வொரு போட்டியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் விஜய் சேதுபதியின் செயல்கள் மக்களை கவர்ந்ததால் இனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரொம்பவே விறுவிறுப்பாக போகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

Trending News