ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அழுகுணி ஆட்டம்.. என்னம்மா ஆ.. ஊ.. ன்னா பாத்ரூம்-க்கு போயி அழுதுட்டே இருக்கீங்க!

பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளியான பெரும்பாலான ப்ரோமோக்களில் பெண்கள் அழுத வண்ணமாகவே இருக்கிறார்கள். ஏதாவது யாரவது சொல்லி விட்டால், ஒன்று Confession ரூம், அல்லது பாத்ரூம். ஏதேனும் ஒரு இடத்துக்கு சென்று அழுகிறார்கள்.

அழுவது தவறு இல்லை. அழுவதற்கு சரியான காரணம் இருந்தால், யாரும் கேள்வி கேட்க போவதும் இல்லை. ஆனால் இவர்கள் அழுவதெல்லாம் 1 ஆம் வகுப்பு குழந்தைகள் ரப்பர் பென்சிலை தொலைத்துவிட்டு அழுவதை போல இருக்கிறது. இதில் ஒரு சில அழுகைகள், திட்டமிட்ட அழுகைகளே.

அழுவதில் கூடவா Strategy

ஏற்கனவே முத்துக்குமரன் மீது அன்ஷிதா செம்ம காண்டில் இருக்கிறார். தற்போது, ஜாக்குலின் கூடையும் ஏழரை இழுத்திருக்கிறார். ஆனால் அவர் சாதாரணமாக தான் பேசுகிறார். இவர்கள் தான் எதற்கு அழுகிறார் என்றே தெரியவில்லை. மொத்தத்தில் முத்துகுமாரனை காலி பண்ண, பெண்கள் அணி முடிவு செய்து விட்டது என்று மட்டும் தெரிகிறது.

அதே நேரத்தில், அழுதால், யாரும் கேள்வி கேட்க மாட்டார். சண்டை போடுபவர்கள் கூட அமைதியாக போய்விடுவார். அவர்களுக்குள் ஒரு guilt வந்துவிடும். இதை புரிந்துகொண்ட பெண்கள் இதை strategy ஆக பயன்படுத்துகின்றார்களோ என்றும் தோன்றுகிறது.

எதற்கெடுத்தாலும் ஏன் அழுகிறீர்கள் என முத்துக்குமரன் கேட்க நான் எதற்கு அழ வேண்டும் என்பது கூட உங்கள் பிரச்சனையாக இருக்கிறதா என ஜாக்குலின் கேள்வி எழுப்புகிறார். இதையெல்லாம் பார்க்கும் நமக்கு தான் தலையில் அடித்து கொண்டு அழ தோன்றுகிறது.

- Advertisement -

Trending News