Connect with us
Cinemapettai

Cinemapettai

biggboss-ல் இருந்து வெளியேறிய ஓவியாவுக்கு அடித்தது ஜாக்பாட், அடுத்த படம் இவருடன.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

biggboss-ல் இருந்து வெளியேறிய ஓவியாவுக்கு அடித்தது ஜாக்பாட், அடுத்த படம் இவருடன.

பத்து படங்களில் நடித்தாலும் பெற முடியாத புகழை ஒருசில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா பெற்றார் என்பது தெரிந்ததே. இதுவரை எந்த நடிகைக்கும் ஆர்மி, புரட்சிப்படை ஆகியவை தோன்றியதாக வரலாறு இல்லை. முதல்முதலாக ஓவியாவுக்கு குவிந்த ரசிகர்களின் கூட்டம் தானா சேர்ந்த கூட்டம். மேலும் முதல்முறையாக ரசிகர்கள் ஒரு நடிகையின் உள்ளழகையும், உண்மையையும் ரசித்தனர்.vijay record

இந்த நிலையில் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஓவியாவுக்கு பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘விஜய் 62’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. பிறகென்ன, தளபதி படத்தில் நடிக்க மாட்டேன் என்றா ஓவியா சொல்லப்போகிறார்.

இந்த தகவல் உண்மையானால் ஓவியா ஆர்மியினர்களுக்கு இதைவிட வேறு சந்தோஷமான விஷயம் இருக்க முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டாலும், அவருக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை கொடுத்ததும் அதே பிக்பாஸ் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top