Connect with us
Cinemapettai

Cinemapettai

jackie-john

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பயங்கரமான எதிர்பார்ப்பில் வெளியான வான்கார்ட்(Vangaurd) பட ட்ரெய்லர்.. அதிரடியில் மிரள விட்ட ஜாக்கி சான்!

தற்காப்புக் கலைஞர், நடிகர், ஸ்டேட்மென்ட், திரைப்பட தயாரிப்பாளர், அதிரடி நடன இயக்குனர், பாடகர் என பல்வேறு முகங்களைக் கொண்ட பிரம்மாண்டம் தான் ஜாக்கி சான். இவருக்கு உலகம் முழுவதிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

மேலும் ஜாக்கிசான் உலகில் உள்ள மக்களால் எளிதில் அடையாளம் காணக்கூடிய அளவுக்கு புகழ் மிக்கவர். அதுமட்டுமில்லாமல், 2016ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகராகவும் ஜாக்கிசான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஜாக்கிசான் நடிப்பில் தயாரான வான்கார்ட்(Vangaurd) திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு, சீனாவின் அதிரடி சாகச படமாக உருவான படம் தான் ‘வான்கார்ட்’. மேலும் ஸ்டான்லி டோன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜாக்கி சான், யாங் யாங், மியா முகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப்படம் ஜனவரி 25ஆம் தேதி 2020 அன்று சீனாவில் திரையிடப்பட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனவைரஸ் பாதிப்பின் காரணமாக, இந்தப் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும் இந்தப் படம் இந்தியாவில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top