லொள்ளு சபா ஜீவா நடிக்கும் ‘ஆரம்பமே அட்டகாசம்’ என்ற படம் மே மாதம் 5ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ஆடியோவை முன்னதாக ரஜினிகாந்த் வெளியிட்டார்.படத்தின் டிரைலரை வருகிற 28ம் தேதி நடிகர் கமல் வெளியிட உள்ளார்.

படம் குறித்து நடிகர் ஜீவா கூறுகையில், ஆரம்பமே அட்டகாசம் படம்  இன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு பிடித்தமான பக்கா கமர்சியல் படம்,இந்த படத்தின் ஆடியோவை ரஜினி சார் வெளியிட்டார். படத்தின் ஆடியோவை உங்கள் கையினால் தான்  வெளியிட  ஆசைப்படுகிறேன் தலைவா என்று ரஜினி சாரிடம் சொன்னேன். அவர் உடனே வரச்சொல்லி இசையை வெளியிட்டார். பட தலைப்பை கேட்டதுமே என்ன லவ் பிலிமா என ரஜினி சார் என்னிடம் கேட்டார்.

அதிகம் படித்தவை:  75 செலிபிரிட்டிகள் வெளியிட்ட விஜய் சேதுபதியின் சீதக்காதி ட்ரைலர்.

படம் ரிலீஸ் ஆனதும் படம் பார்க்க வருவதாகவும்  சொல்லியிருக்கிறார். வருகிற ஏப்ரல் 28ம்  தேதி அன்று நடிகர் கமல் சார் என் படத்தின் டிரைலரை வெளியிடுகிறார். இரண்டு பெரிய கலைஞர்களின் வாழ்த்து என் படத்திற்கு கிடைத்திருப்பது எனக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் இன்னும் அதிகமாக கொடுத்துள்ளது.

படத்தில் திருட திருட தொலைகிறாய்  என்ற பாடல் யூ டியூப்பில் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகியுள்ளது. அதே ஆதரவு படத்திற்கும் ரசிகர்கள் வழங்குவார்கள் என நம்புவதாக லொள்ளுசபா ஜீவா தெரிவித்தார். இந்த படத்தில் ஹாலிவுட் படங்களுக்கு  இணையாக 10க்கும் மேற்பட்ட லிப்டு  லிப் காட்சிகள் இருக்கும் போது ஜீவாவிற்கு என்ன கவலை? இரண்டு  பெரிய நடிகர்களின் ஆதரவு வாழ்த்து பெற்ற போதிலும் அடுத்த படத்தை வெளியிட சீனாவில் இருந்து நம்ம ஜாக்கிசானை அழைக்க உள்ளராம் நம்ம ஜீவா…