Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தை பின்பற்றும் ஜாக்கிசான்.. அந்த பிரச்சனையில் தல மாதிரியே மாறிட்டாராமே!
தல அஜித் வீட்டைவிட்டு அதிகம் வெளியில் வரவில்லை என்றாலும் அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் உலக அளவில் டிரெண்ட் ஆகி விடுகிறது.
அந்த வகையில் உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் தல அஜித்தை போலவே ஒரு பிரச்சனையில் முடிவு எடுத்தது தல ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
தல அஜித் சமீபத்தில் அவருடைய பெயரை பயன்படுத்தி பல மோசடிகள் நடப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் தன்னுடைய மேனேஜரை தவிர வேறு யாரும் தன்னுடைய பெயரை பயன்படுத்தினால் தனக்கு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் உலக அளவில் பிரபல நடிகராக வலம் வரும் ஜாக்கிசானுக்கு இதே போன்ற பிரச்சனை நடந்துள்ளதாம். அவருடைய கம்பெனி பெயரைச் சொல்லி அடிக்கடி மோசடிகளில் பலர் ஈடுபட்டு வருகிறார்களாம்.
இந்நிலையில் தல அஜித் போலவே ஜாக்கிசானும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய கம்பெனி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு குறிப்பிட்ட சில நபர்கள் இருப்பதாகவும், அவர்கள் இல்லாமல் வேறு யாரேனும் தன்னுடைய பெயரை பயன்படுத்தினால் குறிப்பிடும்படி தெரிவித்துள்ளார்.
தல அஜித் போலவே ஜாக்கிஜான் செய்துள்ளதால் அதை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
