Tamil Cinema News | சினிமா செய்திகள்
66 வயதிலும் அடங்காத ஜாக்கிசான்.. திடீரென அவரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
ஒரு காலத்தில் தமிழில் டப் செய்யப்படும் சைனா படங்களில் முக்கால்வாசி ஜாக்கிசான் நடித்த படங்கள்தான் தமிழில் வெளியாகும். தமிழ்நாட்டிலும் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனால் சமீபகாலமாக சைனா படங்கள் எதுவுமே தமிழ் சினிமாவில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவில்லை. ஜாக்கிசான் அளவுக்கு வேறு யாரும் தமிழ் ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்லலாம்.
இந்திய சினிமாவில் 60 வயதை தாண்டிவிட்டால் தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு பெரும்பாலும் டூப் போட்டு நடிக்கும் நடிகர்கள் மத்தியில் 66 வயதான நிலையிலும் சாகச காட்சியில் ஈடுபட்டுள்ளார் ஜாக்கிசான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாக்கிசான் நடித்துவரும் திரைப்படம் வேன்கார்டு. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் நீரில் சாகசம் செய்யும் காட்சி ஒன்று படமாக்கப்படும் போது திடீரென ஜாக்கிசான் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீருக்கடியில் மாட்டிக்கொண்டார்.
சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு எப்படியோ ஜாக்கிசானை காப்பாற்றிவிட்டனர். இன்னும் சில நொடிகள் தாமதித்திருந்ததால் ஜாக்கிசான் உயிர் பிரிந்திருக்கும் என அச்சத்தை ஏற்படுத்தி விட்டனர்.

jackie-chan-risky-stunt
66 வயதில் இந்த மாதிரி சாகசம் எல்லாம் தேவையா என அவரது ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். மேலும் ஜாக்கிசானை பத்திரமாக இருக்கச் சொல்லும் படி ரசிகர்கள் தொடர்ந்து ட்விட் செய்துவருகின்றனர்.
இந்த மாதிரி எல்லாம் ஒரு கலைஞன் இனி பிறந்து தான் வரணும்.
