Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜாக்கிசானின் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?!!
ஜாக்கிசானின் மகள் தற்போது இருக்க இருப்பிடம் இல்லாமல் தெருவோரங்களில் தங்கி இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹாங்காங் நடிகராக இருப்பவர் ஜாக்கிசான். இவரது படங்களில் அக்ரோபாட்டிக் சண்டைப் பாணி, வேடிக்கையான நேர உணர்வுத் திறன், புதிய ஆயுதங்கள் மற்றும் புதிய முறை சண்டைகள் ஆகியவை மிகவும் பிரபலமாக இருக்கிறது. 1970களில் இருந்து நடித்து வரும் ஜாக்கி இதுவரை 100 படத்திற்கும் மேலாக நடித்து இருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் தனது படத்தின் பல தீம் பாடல்களை பாடி இருக்கிறார். 1982 ஆம் ஆண்டில் ஜாக்கி சான் லின் ஃபெங்-ஜியாவோ என்ற தைவான் நடிகையை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஜாயஸ் சான் என்ற மகனும், எட்டா நங் என்ற மகளும் இருக்கிறார்கள்.
ஜாயஸ் சான் நடிகராக புகழ் பெற்றவர். எட்டா நங் நிலைமை தான் தற்போது கவலைக்கு இடமாக இருக்கிறது. கடந்த வருடம் தன்னை ஒரு ஓரினசேர்க்கையாளர் என அறிவித்தார் எட்டா. இது ஹாங்காங் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, எட்டாவை வீட்டு விட்டு வெளியேற்றினார் ஜாக்கிசான்.
இந்நிலையில், எட்டா வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி இருக்கிறது. அந்த வீடியோவில் தன் தோழி ஆண்டி அண்ட்டும் வீட்டின்றி சாலையோர பாலத்தின் அடியில் வசித்து வருவதாகவும், தங்க வாடகைக்கு வீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், எனக்கும், ஆண்டிக்கும் இருப்பது புனிதமான அன்பு மட்டுமே. பல நூறு கோடிக்கு சொந்தமான என் தந்தை ஜாக்கிசான் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் என்னை எதிர்க்கிறார்கள்.
எங்கள் இருவருக்கும் உதவி செய்ய யாரும் இல்லை. பலரும் எங்களை பிரித்துவிடுவார்களோ என பயமாக இருக்கிறது. யாராவது எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதே வேளையில், ஜாக்கிசான் என் மகளை வளர்ப்பதில் தந்தையாக நான் தவறிவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.
