நான் 60 படங்களில் நடித்திருக்கிறேன். அதில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இந்த மாதிரி அனுபவங்கள் கிடைத்திருக்கிறது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

‘தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை உள்ளது. பட வாய்ப்புகளுக்காக படுக்க அழைக்கிறார்கள்’ என பரபரப்பு ஸ்டேட்மென்ட் ஒன்றைக் கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

பாலிவுட் நடிகையான இவர், ‘தோனி’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ‘வெற்றிச் செல்வன்’, ‘கபாலி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அத்துடன், இரண்டு தெலுங்குப் படங்களிலும், ஒரு மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

“ஒருமுறை தயாரிப்பாளர் ஒருவரைச் சந்தித்து படம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். திடீரென அவர் என்னை படுக்கை அழைத்தார். நான் அந்த மாதிரி நிலைக்குப் போகவில்லை.

அவர்களை உதாசீனம் செய்துவிட்டேன். அதனால்தான், தென்னிந்திய மொழிகளில் எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

இது உண்மை தானா? என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கும் கஸ்தூரியிடம் கேட்டோம். ‘ஐஇ தமிழ்’க்காக அவர் பிரத்யேகமாக அளித்த பதில் இது.

“ராதிகா ஆப்தே தென்னிந்திய மொழிகளில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். நான்கு படங்களில் நடிக்கும்போது இரண்டு படங்களில் இதுமாதிரி அனுபவம் ஏற்பட்டால், பாதிக்குப் பாதி கெட்டவர்கள் என்பது போல் ஆகிவிடும்.

நான் 60 படங்களில் நடித்திருக்கிறேன். அதில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இந்த மாதிரி அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. ஆக, எத்தனைப் பேர் நல்லவர்கள் என எனக்குத் தெரியும். எல்லாமே பார்வையில்தான் இருக்கிறது” என்கிறார் கஸ்தூரி.