‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தைத் தயாரித்த வகையில், மைக்கேல் ராயப்பனுக்கு ஏகப்பட்ட கோடிகள் நஷ்டம். சில நாட்களுக்கு முன் தாங்கள் பட்ட இன்னல்களை பற்றி  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்  மைக்கேல் ராயப்பன் மற்றும் படத்தின் இயக்குனர் அதிக் ரவிச்சந்திரன்.

அதற்கு பதில் சொல்லும் விதமாக ” படத்தில் நடித்து, வெளியாகி முடிந்துவிட்டது. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படியொரு சட்டமும் இல்லை. சொல்லப்போனால் ராயப்பன் அவர்கள் எனக்கு 3 .5  கோடி சம்பள பாக்கி வைத்தார் என்று படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே நான் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். எனக்கு ரெட் கார்டு கொடுத்தால், அதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியும் ” என்று சிம்பு தன் தரப்பின் வாதத்தை  கூறியுள்ளார்.

இந்நிலையில் படங்களை ரிவியூ செய்யும் பிரசாந்த் சிம்புவிடம் கேட்க நினைத்த கேள்விகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

சிம்புவுக்கு எதிராக  நெருக்கடி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவரும் அதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அசராமல் தான் இருக்கிறார். இந்நிலையில் நாளை சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா பட இசை வெளியீட்டு விழாவில் சிம்பு தன தரப்பு பதிலை சொல்வார் என்று கிசு கிசுகிறார்கள் விஷயம் அறிந்த ஒரு சிலர்.