சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘வனமகன்’ திரைப்படம் வருகிற மே 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி, சாயீஷா சாய்கால் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘வனமகன்’ திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘திங் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. ஹாரிஸ் இசையமைப்பில் வெளியான 50வது படமான ‘வனமகன்’ பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைய் பெற்றுள்ளது.

 

View image on TwitterView image on Twitter

வனத்தில் வாழும் மனிதர் நகரப் பகுதிக்கு வந்து காதல் கொள்வது போன்ற கருவை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் பிரபல ஹாலிவுட் படமான ‘டார்சன்’ திரைப்படத்தை போன்று இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே விக்ரம் பிரபுவின் ‘சத்ரியன்’, ஜீவாவின் ‘சங்கிலி புங்கிலி’, உள்ளிட்ட படங்கள் வருகிற மே 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோடை விடுமுறை வெளியீட்டு பட்டியலில் ஜெயம் ரவியின் ‘வனமகன்’ திரைப்படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.