fbpx
Connect with us

ரெமோ படத்திற்கு தனுஷால் வரும் பாதிப்பு ?

ரெமோ படத்திற்கு தனுஷால் வரும் பாதிப்பு ?

தனுஷ்தான் சிவகார்த்திகேயனின் இன்றைய நிலைமைக்கு ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒண்ணும் மண்ணுமாக இருந்த தனுஷும் சிவகார்த்திகேயனும் யார் கண்பட்டதோ நாளடைவில் பன்னும் மண்ணுமாக மாறிப்போனார்கள். இருவருக்குமிடையே ஈகோ பிரச்சனை உருவானது. இதன் விளைவு இருவரும் பொது இடங்களில் சந்தித்துக்கொள்வதை அறவே தவிர்த்தனர். சிவகார்த்திகேயனின் போட்டி நடிகரான விஜய் சேதுபதியை வளர்த்துவிடும் நோக்கில் தனுஷ் தனது பேனரிலேயே ‘நானும் ரவுடிதான்’ படம் தயாரிக்கும் அளவுக்குப் போனார்.

ஒரு பக்கம் இருவரும் பேட்டிகளில் இதுகுறித்த கேள்விகளுக்கு நாசூக்காக பதில் அளித்துக்கொண்டே மறுபக்கம் முட்டலில் தீவிரமாக இறங்கினார்கள். இப்படி அரசல் புரசலாக போய்க்கொண்டிருந்த இவர்களின் உரசல் இப்போது வெளிப்படையாகவே ஊர் உலகத்துக்கு தெரியும் அளவுக்கு ஒரு காரியம் நடக்கப்போகிறது.

சிவகார்த்திகேயன் தனது நண்பரின் தயாரிப்பில் (அது சிவாவின் சொந்த நிறுவனம்தான் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது) நடித்திருக்கும் ‘ரெமோ’ படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் செப்டம்பர் மாதம் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார். ஏற்கெனவே திட்டமிட்டதைவிட அதிக செலவில் உருவாகியிருக்கும் ‘ரெமோ’ படம் எதிர்பார்ப்பதுபோலவே பெருவெற்றி பெற்றால்தான் சிவகார்த்திகேயனுக்கு பாதுகாப்பு.

அப்படியிருக்க, இதை மனதில்வைத்து தனுஷ், தனது ‘தொடரி’ படத்தை ‘ரெமோ’ படத்துடன் மோதவிடுமாறு தனது தயாரிப்பாளரை நச்சரித்துவருகிறாராம். மேலும் இதற்காக தனுஷ், ஏற்கெனவே அனைத்து வேலைகளையும் முடித்து ரிலீஸுக்கு தயாராகவிருக்கும் தனது ‘கொடி’ படத்தை டிசம்பர் மாத ரிலீஸுக்கு தள்ளிவிட்டு திடீரென ‘தொடரி’ படத்தை ‘ரெமோ’வுடன் மோத மும்முரமாக முயன்றுவருகிறாராம்.

தனுஷின் இந்த வேலையால் சிவகார்த்திகேயனுக்குத்தான் நிச்சயம் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ‘ரெமோ’ படத்துடன் தனுஷ் படம் மோதும்பட்சத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஓப்பனிங் வசூல் குறைவது உறுதி என்றும் படத்தின் ரிசல்ட் என்னதான் ஓஹோ என்று இருந்தாலும் வசூல் கணிசமாக குறையும் என்றும் படத்தின் ரிசல்ட் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் வசூல் என்னவாகும் என்றே சொல்லமுடியாது என்று அதிர்ச்சி தருகிறார்கள் விநியோகஸ்தர்களின் வட்டாரத்தில்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top