வருட வருடம் பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ்பட விழா சினிமா உலகத்தில் மிக முக்கியமானது. இதில் பல தமிழ் திரைபடங்கள் கலந்து கொண்டுள்ளன. அஜித் நடித்த பில்லா உட்பட சில படங்களைத் தயாரித்தவர் சுரேஷ், வருடந்தோறும் இவர் கேன்ஸ்பட விழாவுக்கு செல்வது வழக்கம்.

இம்முறை சென்ற போது அவருக்கு ஒரு ஆர்ச்சர்யம் காத்திருந்தது. அதாவது கேன்ஸ் விழாவில் பிரெஞ்சு படங்கள், ஹாலிவுட் படங்கள் என்று பெவிலியன்கள் தனித்தனியாக இருக்கும். அதுபோல இந்திய மொழிப் படங்களுக்கு என்று தனியாக பெவிலியன் இருந்தது. அங்கே இந்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிப் படங்களை திரையிட்டு காட்டுவார்கள்.

அதிகம் படித்தவை:  'சினிமா வீரன்' எப்படிப்பட்ட படம் ?

இந்திய மொழிப் படங்களுக்கு பெவிலியன் நான் இருந்தேன் என்றும் திடிரென்று கபாலி டீசர் திரையிட்டார்கள். பெவிலியன் இருந்த அனைவரும் துள்ளிகுதித்து கரகோஷத்தால் அந்த இடமே அதிர்ந்தது. இதை பார்த்த இத்தாலிய சினிமாவைச் சேர்ந்த மிஷெல் க்ராஷியோலா என்பவர் கபாலி குறித்தும், ரஜினி படம் குறித்து என்னிடம் விசாரித்தார். எனக்கு கபாலி படத்தை இத்தாலியில் வெளியிட ஆசை உள்ளது யாரை பார்க்க வேண்டும் என்று கேட்டார்.

அதிகம் படித்தவை:  ரஜினிகாந்த் பேரனை அழைத்து பார்த்த முதல்வர் - ஏன் தெரியுமா?

அதற்கு நான் கலைபுலி தாணு தொலைபேசி என்னும், கபாலி படத்தின் ஓவர்ஸீஸ் உரிமையைப் பெற்றுள்ள சஞ்சய் வாத்வாவின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, தொடர்பு கொள்ளச் சொன்னேன்.

இப்படி ஒரு வரவேற்பை கடல் கடந்து வரும் என்று நான் எதிர்பார்கவில்லை என்று பூரிப்புடன் தெரிவித்தார்.