திரைப்படத்துறையில் கிசு கிசு வருவது சகஜம் தான் ஆனால் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கும், நடிகை கங்கனா ரனாவத்துக்கும் இடையே தொடர்பு இருந்ததை பிரபலம் ஒருவர் உறுதி செய்துள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தன்னுடன் நடித்த கங்கனா ரனாவத்துடன் தொடர்பு வைத்திருந்தார்.

அதன் பிறகு அவர்கள் பிரிந்து கோர்ட் வரை சென்றது பெரிய கதை.
அந்த பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.கங்கனா ரனாவத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளவே இல்லை என்று சாதித்தார் ரித்திக் ரோஷன். மேலும் கங்கனா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவித்தார் ரித்திக்.

ரித்திக் ரோஷன் கங்கனா ரனாவத்தை டேட் செய்தது உண்மையே. இது பாலிவுட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். உண்மை தெரிந்தும் அனைவரும் கங்கனாவை ஒதுக்குகிறார்கள் என்று பிரபல விளம்பர பட இயக்குனர் பிரகலாத் காக்கர் தெரிவித்துள்ளார்.பாலிவுட்டில் தாக்குப்பிடிப்பது எளிது அல்ல. அப்படி இருக்கும்போது சினிமா பின்னணி இல்லாமல் வந்து சாதித்துள்ளார் கங்கனா. அவரின் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார் காக்கர்.

கங்கனா சொல்வது உண்மை என்று தெரிந்தும் அவருக்கு யாரும் ஆதரவாக இல்லை. சைக்கோ, மனநலம் சரியில்லாதவர் என்று ரித்திக் சொன்னது தான் கங்கனாவை கோபம் அடைய செய்தது என்று காக்கர் தெரிவித்துள்ளார்.ரித்திக் தன்னை காதலித்தார் என்று கங்கனா கூறி வருகிறார். இல்லவே இல்லை என்கிறார் ரித்திக். இதில் யார் பேச்சை நம்புவது என்று பலரும் குழம்பிய நிலையில் காக்கரின் பேட்டி வெளியாகியுள்ளது.