Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளத் தோன்றியது.. மனம் திறந்த இளம் நடிகை

அமீர்கானின் தங்கல் படம் நினைவிருக்கிறதா?. மல்யுத்தத்தை மையமாக வைத்து ஹரியானாவில் நடக்கும் அந்த கதை இந்தியாவில் மட்டுமல்ல சீனாவிலும் வசூல் வேட்டையாடியது. சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அந்த படத்தில் இளம் வயது கீதா போகத் கேரக்டரில் நடித்த ஜாய்ரா வாசிம், மன அழுத்தம் குறித்து பேசியிருக்கிறார். தங்கல் மற்றும் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என இரண்டு படங்களிலுமே நடிப்பில் செஞ்சுரி அடித்த ஜாய்ரா, அதில் ஒரு படத்துக்காக தேசிய விருதையும் வென்று அவர் அசத்தியிருக்கிறார்.

12 வயதே ஆன ஜாய்ரா, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டதாக மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிக நீண்ட பதிவொன்றை இட்டுள்ள ஜாய்ரா, “மன அழுத்தம் என்ற வார்த்தையைச் சுற்றியுள்ள சிக்கல்கள் மட்டுமல்லாது, அதை ஒப்புக்கொள்வதில் இருந்த தயக்கம் மற்றும் அச்ச உணர்வு போன்றவை என்னை மிகவும் பாதித்தன. அதுமட்டுமல்லாது இந்த வயதில் உனக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று சுற்றியிருப்பவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஜாய்ரா வாசிம், ஒரு சில நாட்களில் மன அழுத்தத்திற்காக 5க்கும் மேற்பட்ட மாத்திரைகளை விழுங்கியதாகவும், நடு இரவில் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனைக்காக காத்திருந்த நாட்களையும் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், நாட்கள் வெறுமையாகக் கழிந்தன என்று குறிப்பிட்டுள்ள அவர், கடுமையான மன உளைச்சல், வெறுமை, அதீத வெறுப்புணர்வு, நாட்கணக்கில் தூங்குவது அல்லது தூக்கமே இல்லாமல் வாரக்கணக்கில் விழித்திருப்பது என கடுமையான காலகட்டங்களைக் கடந்து வந்ததாகவும் உருக்கத்துடன் அவர் பதிவிட்டுள்ளார்.

அதுபோன்ற சூழல்களில் சில முறை தற்கொலை செய்துகொள்ளலாமா என்று கூடத் தோன்றியதுண்டு என்று மனம் திறந்துள்ள அவர், 12 வயதில் முதல் பயம் ஏற்பட்டதாகவும், பிறகு 14 வது வயதில் இரண்டாது முறையாகத் தன்னை அச்ச உணர்வு ஆட்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top