வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிக் பாஸ் போட்டியாளர்கள் ராணவை ஒதுக்கியது தப்புதான்.. ஆன ஒரே நாளில் ஆர்மி எல்லாம் எப்படி பாஸ்

Vijay Tv Bigg Boss Tamil 8: எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது பிக் பாஸ்க்கு நல்லாவே பொருந்துகிறது. அந்த வகையில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமாருக்கு தான் மக்கள் அதிக சப்போர்ட் கொடுத்து வந்தார்கள். ஆனால் தற்போது புதுசாக போன ராணவிற்கு கொடி பிடிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். ஆனால் வீட்டுக்குள்ளே போன ஒரு வாரத்தில் அங்கு இருந்த போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து ராணவை ஒதுக்கினார்கள்.

அதுவும் எப்படி சொல்லி முத்திரை குத்தினார்கள் டம்மி பீஸ், யாரிடமும் பேச முன்வரவில்லை, புஸ்வானம் மாறி வெத்துவேட்டாக இருக்கிறார் என்று பல கருத்துக்களை சொல்லி அவரை டேமேஜ் பண்ணினார்கள். ஆனால் மொத்த போட்டியாளர்களும் சேர்ந்து ஒருவரை ஒதுக்கியது மிகப்பெரிய தப்புதான். ஆனால் அதற்காக ஒரே நாளில் எப்படி ராணவிற்க்கு ஆர்மி வைக்கும் அளவிற்கு மக்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்பது தான் நம்ப முடியவில்லை.

அதாவது ஒருத்தரை எல்லாரும் சேர்ந்து ஒதுக்கும்பொழுது நமக்காக நாம்தான் எழுந்து நின்று போராட வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் நேத்து ராணவ் யாரை நம்பி நான் இல்லை என்பதற்கு ஏற்ப அவருடைய கருத்துக்களை நியாயமாகவும் பலத்த குரலிலும் தெளிவாக வைத்தார். இத்தனை நாள் எங்க இருந்தீங்க என்பதற்கு ஏற்ப பிக் பாஸ் வீட்டிற்கு இவர் தான் சரியான ஆளு என்பதற்கு ஏற்ப பொங்கி விட்டார்.

அந்த வகையில் இவருடைய ஆட்டம் இனி பிக் பாஸ் கேமை மாற்றி அமைக்கப் போகிறது. இன்னும் சொல்லப்போனால் இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்பதற்கேற்ப ராணவ் மக்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டார். இப்படியே போனால் இந்த சீசனிலும் வைல்ட் கார்டு மூலம் போன போட்டியாளர்களில் ஒருவராக ராணவ் வின் பண்ணுவார் போல.

அதிலும் புதுசாக கிளம்பிய ஒரு புரளியில் இந்த சீசனில் R போட்டியாளர் தான் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டது. அந்த வகையில் R(Ranav) ராணவ் இருப்பாரு போல. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் இதே மாதிரி ராணவ் விளையாட ஆரம்பித்தால் இவர்தான் பிக் பாஸ் இன் டைட்டில் வின்னர்.

- Advertisement -

Trending News