ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில், சென்னை ஐடி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஏராளமான மென்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தரமணியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் பணிகளை புறக்கணித்துவிட்டு, அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிண்டி ஒலிம்பியாவில் மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களும், சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளைத் தாங்கியும், கோஷங்களை எழுப்பியும், மென்பொருள் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். பெருங்குடியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மென்பொருள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here