Connect with us
Cinemapettai

Cinemapettai

thalapathy-65-cinemapettai-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குஷ்பூவை அடுத்து தளபதிக்கு தூண்டில் போடும் கட்சி.. சின்ன மீனை போட்டு பெரிய மீனை புடிக்குறாங்க போல!

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் கதாநாயகன் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எக்கச்சக்கமான ஃபேன்ஸ் பட்டாளம் உள்ளது.

அப்படி இருக்க, இவரை அரசியலில் இழுப்பதற்கு மாநிலக் கட்சி பாஜக முழுமூச்சில் இறங்கிவிட்டது. அதற்கான முயற்சியின் ஒருபடியாய் தளபதியின் வீட்டில் ஐடி ரைட்டை ஏவி விட்டுள்ளனர்.

இந்த ரைடுக்கு முக்கிய காரணம் என்னவென்றால், தங்கள் கட்சியில் இணையாமல்  தமிழகத்தில் தளபதி தனிக்கட்சி ஆரம்பித்து பாஜகவிற்கு போட்டியாக வந்து விடுவாரோ? என்ற பயத்தில் இப்படிப்பட்ட வேலை எல்லாம் செய்து வருகிறது பாஜக.

ஆனால் அதுக்கெல்லாம் அசராம தளபதி விஜய் நின்னு களத்துல ஆடுகிறார்கள். அதுதான் ரசிகர்களும் அவரிடம் எதிர்பார்ப்பது.

எனவே தற்போது விஜய் வீட்டிற்கு வந்த இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் அதிகாரிகள் விஜய்யிடம் வரி கட்டியதற்கான அனைத்து ஆவணமும் பக்காவாக இருக்கிறது என்று ஜகா வாங்கிவிட்டனர்.

மேலும் விஜய் வழிக்கு வராததால் அவருடைய தந்தை எஸ். ஏ. சந்திரசசேகர் பாஜகவில் இணைந்து விட்டார் என வதந்திகளை பரப்பி விடுகிறது பாஜக.

ஆனால் அவரோ, “நான் எந்த கட்சியிலும் இணையவில்லை. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று கோபத்துடன் பேட்டியளித்தார்.

vijay-cinemapettai

vijay-cinemapettai

இப்படி விஜய்யை அரசியலில் இருக்க பல அங்குள்ல தூண்டில் போட்டு வருகின்றனர்.  அதில் ஒரு பகுதியாய் தற்போது விஜய் வீட்டில் நடந்துள்ள ஐடி ரைட் சம்பவத்தால் அவருடைய ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

Continue Reading
To Top