நாளைய மனிதன், கடவுள், காதல் கதை ஆகிய படங்களை எடுத்தவர் வேலு பிரபாகரன். இவர் நேற்று தன்னை விட மிகவும் வயது குறைவான நடிகை ஷெர்லி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதற்கு இவர் விளக்கம் அளிக்கையில் ‘நம் நாட்டில் என் வயதுக்காரரை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள். அதனால் இந்த வயதில் நான் ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்ற கேள்வி வர தான் செய்யும்.

மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 74 வயதில் மிகவும் இளம் வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார், வயதை விடுங்க, அனைத்து மனிதர்களுக்கும் ஒரு துணை தேவை.

ஷெர்லி எனக்கு கிடைத்தது ஓர் அதிர்ஷ்டம், அவர் என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளார்’ என்று வேலு பிரபாகரன் கூறியுள்ளார்.