புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

காதலைப் பிரிக்க தயாரான ஈஸ்வரி.. வெடிக்கப் போகும் பூதாகர சண்டை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் தற்போது கோபி மற்றும் ராதிகா இருவரும் திருமணம் செய்து கொண்டதால் அவரது அம்மா ஈஸ்வரி கடும் கோபத்தில் உள்ளார்.

இது ஒருபுறம் இருக்க இப்போது வில்லி அவதாரம் எடுத்துள்ள ராதிகா தொடர்ந்து பாக்கியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். அவருடைய காண்ட்ராக்ட் கேன்சல் செய்துள்ளார். இதற்காக பாக்கியா பல லட்சங்கள் செலவு செய்த நிலையில் எல்லாமே வீணாகியுள்ளது. இதை எடுத்து பாக்யா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பில் இத்தொடர் சென்று கொண்டிருக்கிறது.

Also Read : ஜனனி பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம்.. புறம் பேசியதற்கு அள்ளிக் கொடுத்த விஜய் டிவி

இந்நிலையில் ஈஸ்வரி தன்னுடைய மகன் வேறொரு பொண்ணை திருமணம் செய்து கொண்ட பொழுது ஏற்பட்ட கோபத்தை விட தற்போது எழில் அமிர்தாவை காதலிப்பதால் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால் செழியினை அழைத்துக் கொண்டு எழிலின் காதலுக்கு ஆப்பு வைக்க அமிர்தா வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு உங்க மருமகளை என் பேரன் தலையில கட்டிடலாம்னு பார்த்தீங்களா என வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இதனால் அமிர்தாவின் மாமனார் மற்றும் மாமியார் இருவருமே அதிர்ச்சி அடைகிறார்கள். இதனால் கண்டிப்பாக எழில் பேச்சை இனிமேல் இவர்கள் கேட்க மாட்டார்கள்.

Also Read : 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த விஜய் டிவி பிரபலம்.. அதிரடியாக கைது செய்த காவல்துறை

மேலும் அமிர்தாவும் தனது மனதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வார். ஆனால் இந்த விஷயம் ஒரு வழியாக எழிலுக்கு தெரிந்தால் தனது பாட்டியை வெறுக்க செய்வார். அதுமட்டுமின்றி அமிர்தாவை நான் திருமணம் செய்து கொள்வேன் என்று மிக உறுதியாகவே அவரது பாட்டி மற்றும் குடும்பத்திடம் சொல்ல உள்ளார்.

இதனால் வீட்டில் பல பூதாகர சண்டை வெடிக்க உள்ளது. எப்போதுமே எழிலுக்கு ஆதரவாக இருக்கும் அவரது தாத்தாவுக்கும் அமிர்தாவை எழில் காதல் செய்வது பிடிக்கவில்லை. பல எதிர்ப்புகளை மீறி எழில் எவ்வாறு அமிர்தாவை கரம் பிடிக்கிறார் என்று வரும் எபிசோடுகள் விறுவிறுப்பாக வர காத்திருக்கிறது.

Also Read : டிஆர்பி-யில் விஜய் டிவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. பிரபல சீரியல் பிரபலம் உயிரிழப்பு

- Advertisement -

Trending News