இந்த செய்தியை தினமலர் வெளியிட்டுள்ளது. இதற்கும் சினிமாபேட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  ஜல்லிக்கட்டு தடை நீக்கவேண்டும் பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர் சக்தி சமூக வலைதளம் மூலம் ஒன்றினைந்தது.

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் வன்முறை எதுவும் இன்றி கட்டுப்பாடுடன் போராட்டம் நடத்தினர்.  இதற்கு பொதுமக்கள் ஆதரவு கொடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் போராட்டம் சில நாட்களில் திசை மாறியது. அவசரசட்டம் இயற்றிய பின்பும் போராட்டம் கைவிடபடவில்லை. தமிழகஅரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் வலுத்தது.

பேராட்டத்தில் மதவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவியிருப்பதாக, மத்திய அரசு, மாநில அரசுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தகவல் கொடுத்தது.

அதில்,தமிழ் ஆதரவாளர்கள் என தன்னை கூறிக்கொள்ளும் பல்வேறு அமைப்புகள் கூட்டத்தில் புகுந்துள்ளது. விடுதலை புலி ஆதரவாளர் என கூறி கொள்ளும் சினிமா இயக்குனர் ஒருவர் திவிரமாக களம் இறங்கியுள்ளார்.

இவர்களுடன் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய ஒரு கும்பல் இணைந்து கொண்டது. இந்த கும்பலில் பின்னணியில், தமிழகத்தில் அதிகார மையமாக விளங்கும் ஒரு நபர் இணைந்துள்ளார்.

அவர் பிரதமர் மற்றும் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு எதிராக மாணவர்களை திசை திருப்பி வருகிறார். இந்த அமைப்பு தலைவர்கள் களத்தில் இறங்காமல் அவர்களது இயக்கதிலுள்ள இளைஞர்களை களத்தில் இறக்கியது.

இந்த இயக்கங்களுடன் அரசுக்கு எதிராக பல ஆண்டுகள் போராடி வரும் நக்சல் பாரி, மாவோயிஸ்ட், ஐ.எஸ்.ஐ.எஸ்.,அமைப்புகள் இணைந்து கொண்டது.

மேலும் மாணவர்களை மூளைச்சலவை செய்யும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களும் மாணவர்கள் போர்வையில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் தனித்தமிழ்நாடு வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பியதோடு, தேசிய கொடியை அகற்றிவிட்டு, தனித்தமிழ்நாட்டிற்கு என புதிய கொடியை உருவாக்கி, சென்னை போர் நினைவுச்சின்னம் மற்றும் கோட்டையில் கொடியேற்றவும் திட்டமிட்டுள்ளனர்.

போராடும் மாணவர்களுக்கு எச்சரிக்ககை விடுத்து, போராட்டத்தை கைவிட செய்யவேண்டும். சமூக விரேத கும்பலை, தமிழக அரசு இருப்பு கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றும் மாநில அரசை மத்திய அரசு எச்சரித்தது.

இதை போராட்டகளத்தில் வெளிபடையாக கூறமுடியாமல் போலீஸார், ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டம், சட்டசபையில் முழுமையான சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது அதை ஏற்று கொண்டு கலைந்து செல்லுங்கள் என கூறினர்.

அதை ஏற்று கொண்டு உண்மையாக போராடிய மாணவர்கள் பலர் கலைந்து சென்றனர். மாணவர்கள் போர்வையில் இருந்து இளைஞர்கள் போலீஸாரிடம் வம்பு செய்தனர். அவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். தடியடி நடத்தி கலைத்தனர். இவ்வாறு அந்த தினமலர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.