புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பச்சோந்தியாக மாறும் ஈஸ்வரி, கோபிக்கு ஜால்ரா அடிக்கும் வாரிசுகள்.. பாக்கியா உடன் ஒத்துப் போகும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், அந்த ஆளு எனக்கு வாங்கிக் கொடுத்த சான்ஸ் வேண்டாம் என்று எழில், பாக்யாவிடம் சொல்கிறார். அதற்கு பாக்கியா உன்னுடைய கனவு நிறைவேறும் நாள் நெருங்கி விட்டது. அதை கெடுக்கும் விதமாக நீ ஏதாவது அவசரப்பட்டு காரியத்தை கெடுத்து விடாதே. அவர் ஒன்னும் சும்மா வாங்கி கொடுக்கல, அப்பா என்கிற கடமையை நிறைவேற்றும் விதமாக இந்த ஒன்னாவது இருந்துட்டு போகட்டும்.

அதனால் நீ ஆசைப்பட்ட மாதிரி இந்த படத்தை நல்லபடியாக எடுத்து முடிக்க வேண்டும் என்று பாக்யா, எழில் இடம் சொல்கிறார். அதற்கு எழில் இனி அடுத்து நடக்க போகும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நீ வரக்கூடாது என்று எனக்கு தடங்கல் கொடுத்துக் கொண்டே இருப்பார். அதையெல்லாம் என்னால் ஜீரணிக்க முடியாது என்று சொல்கிறார். இதை கேட்டதும் பாக்யா, இனி அவருக்கு இதுக்கெல்லாம் நேரமே இருக்காது.

நான் கொடுத்த கேஸ் படி கோர்ட் கேஸ் என்று அலைந்து டென்ஷன் ஆகுவது மட்டும் தான் அவருடைய கவனமாக இருக்கும். அதனால் நீ தேவையில்லாமல் யோசிக்க வேண்டாம். நல்லபடியா படத்தை பண்ணு என்று வாழ்த்து சொல்லி முடிக்கிறார். அடுத்ததாக ராதிகாவின் அம்மா எப்படியாவது மாப்பிள்ளையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று ஒவ்வொருவரிடமும் போன் பண்ணி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ராதிகா நான் எதற்கும் தலையிட மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். அவர் பண்ணின தப்புக்கு நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று பாக்கியவுடன் ஒத்துப் போகும் வகையில் ராதிகாவின் கருத்தும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இவர்கள் இருவரும் ஒன்றுதான் என்பதற்கு ஏற்ப கோபிக்கு எதிராக கொடுத்த கேசை வாபஸ் வாங்க முன்வரவில்லை.

அடுத்ததாக இனியா அழுது ஃபீல் பண்ணி செழியன் இடம் பேசுகிறார். பக்கத்தில் ஈஸ்வரியும் மூஞ்சியை பரண்மேளை தூக்கி வைத்தது போல் உம்முன்னு இருக்கிறார். இவர்களைப் பார்த்து பாக்யா பேச போகிறார். ஆனால் ஈஸ்வரி, சொன்னதையே திருப்பி சொல்லும் விதமாக பாக்யாவிடம் கோபி மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லுகிறார்.

ஆனால் நான் என்ன நடந்தாலும் வாங்க மாட்டேன் என்று பாக்கியாவும் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். அடுத்ததாக செழியன், கோபியை பார்ப்பதற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். அங்கே கோபிக்கு ஆறுதலாக பேசுகிறார். ஆனாலும் கோபி எவ்வளவு பட்டாலும் திருந்தவில்லை என்பதற்கு ஏற்ப அந்த நேரத்திலும் பாக்கியாவை தர குறைவாக பேசி செழியன் மனதில் தப்பான எண்ணத்தை உண்டாக்குகிறார்.

பிறகு செழியன் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் நான் உங்களை ஜாமீன் எடுக்கிறேன் என்று ஆறுதல் படுத்தி பக்கத்திலேயே இருக்கிறார். அப்பொழுது கோபி நண்பர், லாயரை கூட்டிட்டு வந்து கோபியை ஜாமினில் எடுத்து விடுகிறார். இன்னொரு பக்கம் கோபி வெளிவரும் வரை நாங்கள் இந்த வீட்டில் எதுவும் சாப்பிட மாட்டோம் என்று உண்ணாவிரதம் இருக்கும் விதமாக ஈஸ்வரி மற்றும் இனியா ஓவராகவே நடந்து கொள்கிறார்கள்.

அப்பொழுது பத்திரிகையாளர்கள் பாக்யாவிடம் கேள்வி கேட்க வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். பாக்யாவும் நடந்த உண்மையை எடுத்துச் சொல்லும் விதமாக ஹோட்டலில் நடந்த அசம்பாவிதத்தை எல்லாத்தையும் போட்டு உடைக்கிறார். இதனை பார்த்து கடுப்பான ஈஸ்வரி மற்றும் இனியா அழுது கொண்டே உள்ளே போகிறார்கள். நேரத்துக்கு நேரம் பச்சோந்தி போல் ஈஸ்வரி குணம் மாறிக்கொண்டே இருக்கிறது.

அதற்கேற்ற மாதிரி கோபிக்கு ஜால்ரா பண்ணும் விதமாக இனியா மற்றும் செழியன் ஒத்து ஊதுகிறார்கள். இருந்த போதிலும் கோபி வெளி வந்து விட்டார். இன்னும் பாக்கியவை பழிவாங்க வேண்டும் என்று பல மடங்கு நினைப்பில் கோபி சைக்கோ தனமாக நடந்து கொள்ளப் போகிறார். ஆனால் அதை எல்லாம் தாண்டி பாக்கியா அடுத்தடுத்து ஜெயித்துக் கொண்டே இருக்கப் போகிறார். அதே மாதிரி ராதிகா, கோபியை விட்டு பிரிந்து போய் சந்தோசமாக வாழ போகிறார். கடைசியில் கோபி யாரும் இல்லாமல் தனி மரமாக நடுரோட்டில் இருக்கப் போகிறார்.

- Advertisement -

Trending News