Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா தன்னுடைய சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் போவார் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது. அதாவது டான்ஸ் போட்டியில் தான் தேர்வாகியிருக்கிறோம் என்பதால் அதில் எப்படியும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் இதற்கு வீட்டில் இருக்கும் அம்மா மற்றும் ஈஸ்வரி பெர்மிஷன் கொடுக்காததால் கோபி இடம் பேசலாம் என்று முடிவு எடுத்து விட்டார். அந்த வகையில் கோபிக்கு போன் பண்ணி நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று வீட்டு வாசலுக்கு வர சொல்கிறார். அங்கே வந்த கோபியிடம் விசயத்தை சொல்லும் பொழுது நடுரோட்டில் வைத்து எதுவும் பேச வேண்டாம் என்னுடன் வீட்டுக்கு வா என்று ராதிகா வீட்டுக்கு கூட்டிட்டு போகிறார்.
ஈஸ்வரியை அவமானப்படுத்தி பேசிய பாக்கியாவின் வாரிசுகள்
அங்கே போனதும் என்னாச்சு ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அதற்கு இனியா டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள போகிறேன். இரண்டு மாசம் பிராக்டிஸ் பண்ணி டிவி ஷோவில் டெலிகாஸ்ட் ஆகும் என்று சொல்கிறார். இதற்கு ஆரம்பத்தில் கோபி, இனியா சொன்னதும் வேண்டாம் வெறுப்பாக இருந்தாலும் பாக்யா இதை மறுக்கிறார் என்று தெரிந்ததும் இனியாவிற்கு சப்போர்ட்டாக பேசி நம்ம பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக இனியாவிற்கு ஓகே என்று பெர்மிஷன் கொடுக்கிறார்.
இதற்கிடையில் இனியாவை காணும் என்று பாக்கியா எல்லா பக்கமும் தேடிப் பார்க்கிறார். பிறகு ஜெனி மற்றும் பாக்யா வாசலில் நின்னு இனியா எங்கே போயிருப்பார் என்று போன் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கோபி, இனியவை கூட்டிட்டு வீட்டிற்கு வருகிறார். பிறகு இனியா, பாக்கியாவை பார்த்து பயந்து பயந்து போகிறார். அதற்கு கோபி நீ ஒன்னும் பயப்பட வேண்டாம் நான் இருக்கும் வரை நீ தைரியமாக இரு என்று சொல்லி வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறார்.
உள்ளே வந்த இனியாவிடம் ஈஸ்வரி நீ ஏன் அங்கே போனாய். உன் அப்பாவை பார்க்காமல் இருக்க முடியாதா? அவருக்கும் இந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி இருக்கேன். பிறகு ஏன் அங்கே போனாய் என்று கேட்கும் பொழுது இனியா, உங்களுக்கு வேணும் என்றால் நான் பேசணும், வேண்டாம் என்றால் பேசக்கூடாதா என்று கோபப்பட்டு ஈஸ்வரியை எதிர்த்து பேசுகிறார்.
அத்துடன் பாக்கியா, இனியா பேசுவதை கேட்டு திட்டுகிறார். இதைக் கேட்ட செழியன், இனியா சொல்வது என்ன தவறு இருக்கிறது. அவர் எங்களுக்கு அப்பாதான, அவர்கிட்ட எல்லாத்தையும் டிஸ்கஸ் பண்ணி பேசுவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று ஈஸ்வரி மனசை கஷ்டப்படுத்தும் விதமாக செழியனும் பேசி விடுகிறார். இதையெல்லாம் பார்த்த பாக்கியா, இனியா தான் சின்னப்பிள்ளை விவரம் தெரியாமல் பேசுகிறாள் என்றால் நீயும் இந்த அளவுக்கு பேசுகிறாய் என்று செழியினை திட்டுகிறார்.
ஆனால் செழியன், கோபிக்கு சப்போர்ட் பண்ணி பேசி பாக்கியா மற்றும் ஈஸ்வரியிடம் சண்டை போடுகிறார். ஆக மொத்தத்தில் கோபி நினைத்தபடி இனியா மற்றும் செழியனை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். இதனால் தினந்தோறும் வீட்டில் இனி பிரச்சினை வெடித்து பாக்கியாவிற்கு மிகப் பெரிய தலைவலியாக மாறப்போகிறது. தன் கணவர் இல்லை என்று தெரிந்ததால் வீட்டில் இருப்பவர்கள் நமக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று ஈஸ்வரி கவலைப்படுகிறார்.
பாவம் எப்படி இருந்த ஈஸ்வரிக்கு இப்படி ஒரு நிலைமையா என்பதற்கு ஏற்ப பாக்கியாவின் வாரிசுகள் ஒவ்வொருவரும் வச்சு செய்கிறார்கள். இதனை தொடர்ந்து கோபி போட்ட சூழ்ச்சியில் பாக்யா ஹோட்டலும் இழுத்து மூடும் அளவிற்கு போகப் போகிறது. வழக்கம் போல் செழியன் சுயநலமாக சிந்தித்து ஜெனியை தனியாக கூட்டிட்டு போகவும் வாய்ப்பு இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- கின்னஸ் ரெக்கார்டு வாங்க தயாரான இனியா
- கோபி பக்கம் சாய்ந்த பாக்யாவின் வாரிசுகள்
- அப்பாவை போல் குடிகாரனாக மாறிய பாக்யாவின் வாரிசு