தமிழ் சினிமாவில் ஒரு நிலைக்கு வந்தப்பிறகு சிலர் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இருக்காது. ஆனால், இங்கு ஒருவர் வளர்ந்து வரும் போதே இப்படியெல்லாம் செய்து வருகிறார்.

அவர் வேறு யாரும் இல்லை, சதுரங்கவேட்டை படத்தில் ஹீரோயினாக நடித்த இஷாரா தான். இவர் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஆனால், கடைசி நேரத்தில் இவர் படப்பிடிப்பிற்கே வரவில்லையாம், இவரை அனுகினாலும் எந்த ஒரு சரியான பதிலும் வரவில்லையாம், இதனால், படக்குழு இவர் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளது.