சதுரங்க வேட்டை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இஷாரா. இவர் அடுத்து ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார்.இந்த படம் மிகவும் சிறிய பட்ஜெட்டில் உருவானது. ஆனால், கால்ஷிட் கொடுத்துவிட்டு இவர் நடிக்கவில்லை என இயக்குனர் புகார் கொடுத்தார்.

இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம், இந்நிலையில் இஷாரா கூறுகையில் ‘நான் எங்கும் ஓடிப்போகவில்லை.அந்த படப்பிடிப்பில் எனக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு முறையாக கிடைக்கவில்லை.

சேஸிங் காட்சியில் ஒரு நடிகை என்று கூட பாராமல் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டனர்.இயக்குனர் என் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளிப்பதாக கூறினார். நானும் கொடுங்கள் என்று விட்டேன், ஏனெனில் என் மீது எந்த தவறும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.