Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி மகன் சஞ்சய் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளாரா? வருத்தத்தில் இருந்த விஜய்.. எங்கே உள்ளார் சஞ்சய்?
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர் தளபதி விஜய். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் விஜய்யுடன் உள்ள நிலையில் மகன் உயர் படிப்புக்காக கனடா நாட்டில் இருந்து வந்தார்.
சினிமாவில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ள சஞ்சய், சினிமா சம்பந்தப்பட்ட படிப்புகளை படிப்பதற்காக கனடா நாட்டில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறார்.
இந்த வருடத்துடன் படிப்பு முடிவடைய இருந்த நிலையில் கொரானாவின் தாக்கம் சற்று அதிகமாகி உள்ளது. இருந்தாலும் கனடா நாட்டில் அவ்வளவாக பாதிப்பு இல்லை என்று செய்திகள் வந்துள்ளன.
இதனால் அங்கேயே தங்கியிருந்து தன்னுடைய படிப்பை முடித்துவிட்டார் சஞ்சய். இடையில் சில நாட்களுக்கு முன்பு இந்தியா வர முடிவு செய்த சஞ்சய் நேரடியாக சென்னை வந்துள்ளார்.
சென்னை வந்தவுடன் ஒரு பெரிய தனியார் ஹோட்டலில் அவர் 15 நாட்கள் தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். 15 நாட்களில் தனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிந்தவுடன் தற்போது தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார் சஞ்சய்.
கடந்த சில மாதங்களாகவே வருத்தத்தில் இருந்த தளபதி விஜய் தற்போது மிகவும் உற்சாகமாக காணப்படுகிறாராம். மகன் நல்லபடியாக வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் வீடே கலகலவென ஆகிவிட்டதாம்.
அடுத்ததாக விஜய் மகன் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சஞ்சய்க்கு படம் இயக்குவதில் பெரிய ஆசை இருப்பதாகவும் அவருடைய நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.
இருந்தாலும் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என சஞ்சய் நிரூபிப்பாரா என்பதை பார்ப்போம்.
