ஒரு நடிகரை தூக்கி வைப்பது பெரிய விஷயமல்ல, ஆனால், சுலபத்தில் அவரது ரசிகர்களே அவரை கீழேயிறக்கி விட்டுவிடுவார்கள்.

எதற்கு எதை முடிச்சுப் போட்டுப் பேசுவது என்பது கூடவா விஜய் ரசிகர்களுக்குத் தெரியாது. அப்படி நடந்த ஒரு விஷயத்துக்கு விஜய்தான் காரணம் என விஜய்யின் ரசிகசிகாமணிகள் சமூக வலைத்தளங்களில் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

mersal

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது.

178 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரி குறைப்புக்கு ‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனம் தான் காரணம் என சிலர் பதிவிட ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு விதமான பொருட்களின் வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

gst

அப்படித்தான் 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அசாம் தலைநகரான கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற போது 178 பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி வரி பற்றிய வசனம் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

நேற்று நடந்த வரி குறைப்பு அறிவிப்பையும், மெர்சல் பட வசனத்தையும் முடிச்சு போட்டு விஜய் ரசிகர்கள் நேற்றே ஒரு பரப்புரையை ஆரம்பித்துவிட்டார்கள். விஜய் ரசிகர்கள் செய்யும் இந்த வேலை எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 70க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

mersal

178 இனங்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. ஏசி ஹோட்டல் ஜிஎஸ்டி குறைப்பு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 7500 ரூபாய் ரூம் வாடகை வசூலிக்கும் ஹோட்டல் அறைகளுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாக குறைத்துள்ளதாக கூறினார்.

இதேபோல ஏசி, ஏசி அல்லாத ரெஸ்டாரண்ட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் கூறினார்.

gst

மொத்தம் 178 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இனி 50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இந்த வரி விகித மாற்றம் நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலாகிறது.

ஷேவிங் கிரீம், ஷாம்பு, பேஸ்ட் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 6 பொருட்கள் 18% வரியில் இருந்து 5% மாக மாற்றப்பட்டுள்ளது.

8 பொருட்கள் 12% வரிவிகிதத்தில் இருந்து 5% மாக மாற்றப்பட்டுள்ளது. 6 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.