fbpx
Connect with us

Cinemapettai

லீக் ஆன மாஸ்டர் பட பைக் சேசிங் வீடியோ.. என்னடா தளபதிய படுக்க வச்சி உருட்டுரிங்க

Videos | வீடியோக்கள்

லீக் ஆன மாஸ்டர் பட பைக் சேசிங் வீடியோ.. என்னடா தளபதிய படுக்க வச்சி உருட்டுரிங்க

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அனிருத் இசையில் உருவாகிய அனைத்து பாடல்களும் செம வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் நாளுக்குநாள் மாஸ்டர் படத்தின் சுவாரசியமான செய்திகள் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் மாஸ்டர் படத்தில் பைக் சேசிங் காட்சியில் நடித்துள்ளதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படம் அதிரடி ஆக்ஷன் படம் என லோகேஷ் கனகராஜ் படம் ஆரம்பிக்கும் போது தெளிவாக கூறிவிட்டார். இதற்கு முன்னர் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களுமே அதிரடியான திரைக்கதையில் உருவான படங்கள் தான்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பதால் இன்னமும் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியுள்ளன. அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

தற்போது ரசிகர்கள் அனைவருமே பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியீடு தான். பட வெளியீடு இப்ப இல்லை என தெள்ளத்தெளிவாக தெரிந்த பின்னர் குறைந்தது ட்ரெய்லர் ஆவது ரிலீஸ் செய்யுங்கள் என லோகேஷ் கனகராஜிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில் மாஸ்டர் படத்தில் விஜய் பைக் சேசிங் காட்சியில் நடித்திருப்பதாக வீடியோ வெளியானது. அதில் சினிமாவுக்கே உரிய ட்ராலி போட்டு காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட மற்ற ரசிகர்கள் விஜய்யை கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் இது உண்மையிலேயே மாஸ்டர் படத்தின் காட்சி தானா அல்லது வேறு ஏதாவது படத்தின் காட்சியால் என படக்குழுவினர் நேரடியாக அறிவிப்பது நல்லது.

Continue Reading
To Top