எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண், பூமிகா நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் குஷி. இது விஜய் நடித்த தமிழ் குஷியின் ரீமேக் தான். தமிழை போலவே ஆந்திராவிலும் இப்படம் ப்ளாக் பஸ்டர் பட்டியலில் இணைந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் 15 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாகவுள்ளது. இதில் பவன் கல்யாண் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார்.

பின்னர் தமிழிலும் இப்படம் ரீமேக் ஆக உள்ளதாம். ஆனால் இதில் விஜய் ஹீரோவாக நடிக்க மாட்டாராம். மேலும் எஸ்.ஜே.சூர்யாவே இப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளாராம்.