Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராஜமௌலி இயக்கத்தில் விஜய்.. உலக மார்க்கெட்டுக்கு வேற லெவல் பிளான் போட்ட தளபதி
தளபதி விஜய் தனது சினிமா மார்க்கெட்டை பலப்படுத்த தொடர்ந்து இடைவெளியில்லாமல் படம் நடிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் தளபதி ராஜமௌலி உடன் இணைந்து இப்படி ஒரு ட்விஸ்ட் கொடுப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ராஜமௌலி தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து RRR என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தமிழில் ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயரிடப்பட்டுள்ளது.
ராஜமௌலிக்கு பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பெரிய அளவில் மார்க்கெட் உருவானது என்பது அனைவரும் அறிந்ததே. பாகுபலியின் இரண்டு பாகங்களும் சேர்த்து கிட்டத்தட்ட 1800 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் RRR படமும் இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தில்தான் ராஜமவுலி தளபதி விஜய்யை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ராஜமௌலியின் திறமை உலகத்திற்கே தெரியும். அதேபோல் தளபதி விஜய்யின் சினிமா மார்க்கெட்டும் தற்போது உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நேரத்தில் ராஜமவுலி உடன் கை கொடுத்தால் தன்னுடைய மார்க்கெட் இன்னும் பல மடங்கு உயரும் என கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் தளபதி விஜய்.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
