வட சென்னை படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதுக்கு இதுதான் காரணமா?

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் தயாராகும் வட சென்னை படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால் படத்தின் வேலைகள் எந்த நிலையில் உள்ளது, படப்பிடிப்பு நடந்து வருகிறதா என்று எந்த தகவலும் சரியாக தெரியவில்லை.

இந்த நிலையில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்த விஜய் சேதுபதி படத்தில் இருந்து நீங்கிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக அமீர் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வந்தது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் கால்ஷீட் பிரச்சனை என்று கூறினாலும் வேறொரு உண்மைக் காரணம் வேறு என்கிறார்கள் வட சென்னை படத்தில் சம்பந்தப்பட்டவர்கள்.

அதாவது சம்பள விஷயத்தில் விஜய் சேதுபதிக்கு சில பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.

Comments

comments