Connect with us
Cinemapettai

Cinemapettai

thamizhum saraswathiyum

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘தமிழும் சரஸ்வதியும்’ கோதையின் வயது இவ்வளவுதானா? அதுவும் தீபக்கை விட வயது கம்மியாம்

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட புத்தம் புதிய தொலைக்காட்சித் தொடர் தான் ‘தமிழும் சரஸ்வதியும்’. சீரியலில் கதாநாயகனாக தமிழ் என்ற கதாபாத்திரத்தில் தீபக் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவருக்கு அம்மாவாக கோதை கதாபாத்திரத்தில் நடிகை மீரா கிருஷ்ணன் நடித்து வருகிறார். சொல்லப்போனால் தீபக் மீராவை விட பல வயது மூத்தவர். இருப்பினும் அவருக்கு அம்மாவாக மீரா நடித்துக்கொண்டிருக்கிறார். அதுவும் மீராவிற்கு வயது 36 தானாம்.

இருப்பினும் கோதை கதாபத்திரத்தில் மீரா மிகக் கச்சிதமாக செண்டிமெண்ட் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்துவதே அவருடைய வெற்றியாக கருதப்படுகிறது. இதில் மட்டுமல்லாமல் சித்தி 2, நாயகி, வந்தாள் ஸ்ரீதேவி போன்ற பல சீரியல்களில்

அம்மா மற்றும் மாமியார் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக மீரா நடித்துக்கொண்டிருக்கிறார். வெறும் மூன்று வயதில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய மீரா, பிறந்த இடம் கேரளா.

kothai-cinemapettai

kothai-cinemapettai

இவர் ‘மார்க்கம்’ என்ற மலையாள படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன்பின்பு இவரை ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தேடி வந்தாலும், படிப்பில் கவனம் செலுத்திய மீரா, படிப்பு முடித்தவுடன் தனக்குப் பிடித்த சினிமாத்துறையில் நடிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

இன்று வரை பல படங்கள் மற்றும் சீரியல்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு வெள்ளித்திரையிலும் கதாநாயகர்களின் அம்மாவாக நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை மீரா கிருஷ்ணன்.

Continue Reading
To Top