Videos | வீடியோக்கள்
நம்ம வந்தியதேவனா இது? No.1 ட்ரெண்டிங்கில், 6 கெட்டப்பில் மிரட்டும் கார்த்தியின் சர்தார் பட டீசர்

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரமான வந்தயத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். இந்த நாவலில் எல்லா கதாபாத்திரத்துடன் தொடர்புடைய கதாபாத்திரம் வந்தியதேவன் தான். இதில் கார்த்தி அந்த கேரக்டருக்கு ஏற்றார் போல் அப்படியே நடித்துள்ளார்.
ஆனால் இது நம்ம வந்தயத்தேவனா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு கார்த்தியின் சர்தார் பட டீசர் வெளியாகி உள்ளது. பி எஸ் மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ராசி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Also Read : ஏமாற்றுகிறதா நடிகர் சங்கம்? நாசர், கார்த்திக், விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்பு
இந்த டீச்சரில் முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த அதிரடி காட்சிகளை இடம் பெற்று இருந்தது. அதுவும் கார்த்தி ரகசிய உளவாளியாக பல தோற்றங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு நொடிக்கு நொடி கார்த்தி ஒவ்வொரு கெட்டபை மாற்றி வருகிறார். இந்த டீசரில் மட்டும் ஆறு கெட்டப்பில் மிரட்டுகிறார்.
இந்நிலையில் டிரைலரை பார்த்த ரசிகர்கள் சர்தார் படத்தின் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏனென்றால் கார்த்தியின் இன்ட்ரே சீனி வேற லெவலில் எடுக்கப்பட்டுள்ளது. விருமன், வந்தியத்தேவன் என்று ரசிகர்களை மகிழ்வித்து வந்த கார்த்தி விரைவில் சர்தார் ஆக வர இருக்கிறார்.
Also Read : பொன்னியின் செல்வன் நடிகர், நடிகைகளின் சம்பள லிஸ்ட்.. அதிகமா கல்லா கட்டிய ஆதித்த கரிகாலன்!
மேலும் சர்தார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்துக்கு கண்டிப்பாக சர்தார் படம் டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது வெளியான சர்தார் படத்தின் டீசர் நம்பர் ஒன் ட்ரெண்டிங் இடத்தை பிடித்துள்ளது.
Also Read : யாருக்கு இப்படி ஒரு குடுப்பனை கிடைக்கும்.. பொன்னியின் செல்வன் படத்தில் இவர்தான் ப்ளே பாய்!
