செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ஒரு ஹிட் படத்துக்கு இவ்வளோ அலப்பறையா.? பழைய இடத்துக்கே திரும்பிய கவின்

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகர்களில் சிலர்தான் இன்னும் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கவின்.

சின்னத்திரையில் இருந்து சத்ரியன் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான கவின், நட்புன்னா என்னன்னு தெரியுமா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எதிர்பாராத விதமான அப்படமும் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை.

அதன்பின், கவின் ஹீரோவாக நடித்த லிப்ட் படம் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில், இப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இதையடுத்து, கவின் நடிப்பில் டாடா படம் வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியான படங்களில் சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் இடம்பிடித்தது. சூப்பர் ஸ்டாரும் இப்படத்தைப் பாராட்டினார்.

இந்த ஆண்டு கவின் நடிப்பில், ஸ்டார் படம் வெளியான நிலையில், அது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடிப்பில் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிக்கு வெளியான பிளடி பெக்கர், சிவகார்த்திகேயனின் அமரன் படத்துடன் மோதியது.

பழைய இடத்திற்கே திரும்பிய கவின்

ஆனால், தீபாவளி ரேசில் அமரன் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், பளடி பெக்கர் கவலையான விமர்சனங்களைப் பெற்றதால் படக்குழு ஏமாற்றம் அடைந்தனர். பிளடி பெக்கர் வெற்றி பெறும் இதன் மூலம் தன் சம்பளத்தை உயர்த்த கவின் திட்டமிட்டிருந்தார். அதன்படி, அவர் ஏற்கனவே இப்புக் கொண்ட கிஸ் படத்திற்காக அவர் ஓரிரு கோடிகள் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி ஒரு படத்தில் நடிக்க கவின் ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகிறது. ஆனால் கிஸ் படத்தில் சம்பளம் குறைவு என்பதால், அதைவிட அதிகம் சம்பளம் கொடுத்த புரடியூசர்களின் படங்களின் நடிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிளடி பெக்கர் படம் சரியாகப் போகாத நிலையில், கிஸ் படத்தில் பழைய சம்பளத்துக்கே நடித்துக் கொடுக்க அவர் ஒப்புக் கொண்டதாகவும், விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏன் இந்த அலப்பறை ரசிகர்கள் கேள்வி

கவின் நடிப்பில் உருவாகும் கிஸ் படத்தை இயக்குனர் சதீஸ் இயக்குகிறார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அயோத்தி பட புகழ் ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார்.

ஏற்கனவே கடந்தாண்டு மே மாதம் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட சில காட்சிகள் எடுகப்பட்ட நிலையில் மீதமுள்ள காட்சிகள் விரைவில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவின் நடிப்பில் வெளியான டாடா என்ற ஒரு படம்தான் சூப்பர் ஹிட். அதற்குள்ளாக அவர் ஒப்புக்கொண்ட படத்தில் நடிக்காமல் இருக்க என்ன காரணம்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News