விவேகம் படத்தின் டீசர் ஹாலிவுட் தரத்தில் வெளியாகியுள்ளது. டீசர் வெளியாகி சாதனை படைத்து வரும் நிலையில் இப்படத்தை பற்றி ஒரு கற்பனை கதை ஒன்று இணையத்தில் உலாவ தொடங்கியுள்ளது.

Counter terrorism squadஇன் ஒரு பிரிவு பல்கேரியாவில் இயங்கி வருகிறது! ஒன்று இந்திய உளவுத்துறையின்(RAW)/மூலம் இந்திய அரசுக்கு ISIS தீவிரவாரிகளால் பேராபத்து வரப்போகிறது என்கிற தகவல் கசிகிறது. தீவிரவாதிகள் துருக்கியில் முகாமிட்டிருக்கலாம் என சந்தேகப் படுகின்றனர். இதனை தொடர்ந்து சில தொடர் தீவிரவாத தாக்குதல்களுக்கு இந்தியா ஆளாகிறது

RAW தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் ஒரு ரகசிய குழு அமைக்கப்படுகிறது. அதில் பழைய அடையாளங்கள் அளிக்கப்பட்டு புதிய அடையாளங்களை உருவாக்கப்பட்டு சிலர் சேர்க்க படுகின்றனர். அதன் தலைவர் தான் அஜித். இவர்கள் ஒரு missionக்கு தயாராகிறார்கள். துருக்கி பார்டரில் இருக்கும் பல்கேரியா சென்று அந்த ISIS தீவிரவாதிகளை அழிப்பதே அந்த மிஷன்.

அதிகம் படித்தவை:  காசி தியேட்டர்க்கு அறம் பார்க்க வந்த நயன்தாரா.!செம உற்சாகத்தில் ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே.!

எதிர்பாராத விதமாக சில சர்வதேச ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. அதே சமயம் இந்த ரகசிய mission set up செய்த RAW தலைவர் இறந்து போகிறார். இந்தியாவின் சர்வதேச அரசியல் நிலைபாடு மாறுகிறது. இந்திய அரசாங்கம் ISIS விசயத்தில் பின்வாங்குகிறது. Mission பாதி கட்டத்தில் இருக்கும் போது call off செய்யப்படுகிறது.

அப்போது ஒரு தேடுதல் வேட்டையின் போது அஜித்தின் குழுவில் இருந்த அனைவரும் இறந்துவிடுகின்றனர்/ தொலைந்து விடுகின்றனர்.

அஜித் தனியாளாக அந்த காட்டில் இருந்த ISIS தளவாடங்களை தகர்த்துவிடுகிறார்

– இடைவேளை –

இருந்தாலும் காட்டை விட்டு வெளியேற முடியாத அஜித் இரவும் பகலும் கிடந்து அல்லலுறுகிறார். அப்போது தன் இளம்வயதை தன் காதல் வாழ்க்கையை மனைவி காஜலை நினைத்து பார்க்கிறார். (20 mins flashback)

அந்த தளவாடம் அழிக்கப்பட்டு செய்தி கேட்டு அங்கே விரைந்த ISIS தலைவர்களை அழித்து அவர்களில் ஒருவரை கடத்தி காட்டை விட்டு வெளியேறுகிறார். அடையாளங்கள் ஏதும் இல்லாத நிலையில் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல், mission call off செய்யப்பட்டதால் பல்கேரியாவில் சுதந்திரமாக நடமாடவும் முடியாமல் எப்படியாவது தப்பி வெளியேற நினைக்கிறார்.

அதிகம் படித்தவை:  ராஜா ராணி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர் தானாம்...

அப்போது அஜித்தை ISIS தீவிரவாதி என பல்கேரிய அரசாங்கம் அறிவிக்கிறது. அதுவும் RAW அமைப்பின் புதிய தலைவர் விவேக் ஓபராய் அறிவிக்கிறார். அவர் நாட்டுக்குள் இருந்துகொண்டே எப்படி தனக்கு நடந்த அநியாயம் என்ன ஏன் இவ்வாறு சிக்கிக்கொண்டோம் என விடைகாண முயல்கிறார்.

தொலைந்து போன mission குழுவினர் கிடைத்தார்களா? அஜித் நாடு திரும்பி மனைவியுடன் இணைந்தாரா? விவேக் ஓபராய் செய்த சூழ்ச்சி என்ன? இதுவே க்ளைமாக்ஸ்!!!

நிஜம் போலவே உள்ள இக்கற்பனை எந்தளவு உண்மை என்பதை படம் வந்தால் தான் தெரிந்து கொள்ள முடியும்.