அஜித், ஷாலினி இருவரின் திருமண நாள் நேற்று (ஏப்ரல் 25). இதனால் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

ஆனால் இதில் என்ன சோகம் என்றால் அஜித்துக்கு, ஷாலினியை நேரில் சந்தித்து வாழ்த்து கூற வாய்ப்பு கிடைக்கவில்லை, ஏனெனில் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருக்கிறார்.

சரி வீடியோ கால் செய்து வாழ்த்து கூறலாம் என்று பார்த்தாலும் அவர் இருக்கும் இடத்தில் சிக்னலே (Signal) இல்லையாம். கடைசியில் நள்ளிரவுதான் டவர் சிக்னல் கிடைத்து அஜித், ஷாலினி வீடியோ காலில் மனம் திறந்து தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்களாம்